நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியா வசிய பொருட்களின் தரம், எடை சரியாக உள்ளதா என அலுவலர்கள் உறு திப்படுத்த வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ். வினீத் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு வட்டம், தென்னம்பாளையம் பகுதியில் மாவட்ட ஆட்சி யர் டாக்டர் எஸ்.வினீத், கூட்டுறவு மொத்த விற் பனை சங்கத்தின் நியாய விலைக்கடையில் ஆய்வு மேற்கொண்டார்.
அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தழிழ்நாடு அரசு பொது விநியோக திட்டத்தின் மூலம், பொதுமக்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை விண்ணப்ப சேவைகள், குடும்ப அட் டையில் பெயர் திருத்தம் , உறுப்பினர் சேர்க்கை, முகவரி மாற்றம், குடும்பத் தலைவர் மாற்றம், குடும்ப அட்டை தொடர்பான சேவைகளை வழங்கி வருகிறது.
பொது விநியோக திட்டத்தின்கீழ், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை, சர்க்கரை, மைதா மற்றும் அத்தியாவசிய பொருட்கள் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் 7,34,913 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், 17,074 சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களும்1,042 காவல் குடும்ப அட்டைதாரர்களும்11,327 முதியோர் உதவித் தொகை பெறும் குடும்ப அட் டைதாரர்களும், 1656 பண்டமில்லா குடும்ப அட்டைதாரர்களும் 111 அன்னபூர்னா குடும்ப அட்டைதாரர்களும் 36,477 அந்தியோயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களும் என மொத்தம் 8,02,600 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
நியாய விலைக்கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியா வசிய பொருட்களின் தரம் மற்றும் எடை சரியாக உள்ளதா என தொடர்புடைய அலு வலர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
தென்னம்பாளையம் பகுதியிலுள்ள கூட்டுறவு மொத்த விற்பனை சங்க த்தின் நியாய வி¬ லக்கடையில் உள்ள பதிவேடுகள் எடை இயந்திரத்தின் செயல்பா டுகள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் அளவு குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, மாவட்ட வழங்கல் அலு வலர் முருகன், செய்தி யாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.



