fbpx
Homeபிற செய்திகள்நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் 11 கட்சிகளின் தேர்தல் ஆணையம்...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் 11 கட்சிகளின் தேர்தல் ஆணையம் ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடனான மாநில தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கு தயா ராகி வருகின்றன. இதற் கிடையில், நகர்ப்புற உள் ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பாணையை வருகின்ற ஜன.22ம் தேதி வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தமிழகத் தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரும்பாக்கத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தலைமையில், திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 11 அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 400 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ஆலோசனை கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவதா?, அல்லது இரண்டு கட்டங்களாக பிரித்து நடத்துவதா? என்பது தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துகளை மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் கேட்டறிந்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக் கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா 3-வது அலை உச்சத்தில் இருப்பதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை நாளை மறுதினம் பரிசீலிப் பதாக உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு பதில் அளித்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img