fbpx
Homeபிற செய்திகள்தொழில் துறையினர் 24450 பேருக்கு இன்றும் நாளையும் கொரோனா தடுப்பூசி கோவை கலெக்டர் சமீரன் நடவடிக்கை

தொழில் துறையினர் 24450 பேருக்கு இன்றும் நாளையும் கொரோனா தடுப்பூசி கோவை கலெக்டர் சமீரன் நடவடிக்கை

கோவை மாவட்டத்தில் தொழில்துறையை சார்ந்தோர் 24,450 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட கலெக்டர் சமீரன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அதை தொடர்ந்து இன்றும் நாளையும் சிறப்பு முகாம் நடத்தி தடுப்பூசி போடப்படுகிறது.

கோவை மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் சமீரன் உத்தரவின்பேரில் மாவட்ட தொழில் மையம், மாவட்ட சுகாதார துறை மற்றும் தொழில் கூட்டமைப்புகள் சார்பில் இன்று (புதன்கிழமை) 10,850 பேருக்கும் நாளை (26-ம் தேதி) 13600 பேருக்கும் சிறப்பு முகாம் மூலம் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டம் ஆக மாற்றமாவட்ட ஆட்சி தலைவர் சமீரன் தீவிர முயற்சிகளை எடுத்துவருகிறார்.

இந்த தடுப்பூசி போடும் பணிகளை சுகாதார துறை அதிகாரிகள், மாவட்ட தொழில் மையம் பொதுமேலாளர் கார்த்திகை வாசன் ஆகியோர் பார்வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img