திருப்பூர் மாவட்டம் தொரவலூர் ஊராட்சி மன்றம் சார்பில் 75 வது: சுதந்திர தின விழா ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவர் முகேஷ்க்கு கல்வித் துறை சார்பாக இலவசமாக புதிய ஆண்ட்ராய்டு போன் வழங்கப்பட்டது.
ஊராட்சி மன்ற தலைவர் தேவகி சம்பத்குமார், அவினாசி அத்திக்கடவு ஒருங்கிணைப்பாளர் சமூக சேவகர் தொரவலூர் சம்பத், ஊராட்சி மன்ற துணை தலைவர்.சிவக்குமார் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், வார்டு உறுப்பினர்கள், தொரவலூர் ஊர் பொதுமக்கள் சமூக இடைவெளி பின்பற்றி கலந்து கொண்டனர்.



