Homeபிற செய்திகள்தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டம்: பார்வர்டு பிளாக் கட்சி ஆலோசனை

தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டம்: பார்வர்டு பிளாக் கட்சி ஆலோசனை

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அருண் ஹோட் டலில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை யில் நடைபெற்றது.

மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பி னருமான கதிரவன் கலந்து கொண்டு உறுப் பினர் சேர்க்கை, தேவர் ஜெயந்தி விழா, கட்சியின் எதிர்கால வளர்ச்சிப் பணிகள் குறித்து சிறப்புடையாற்றினார்.

கூட்டத்தில் தேவர் ஜெயந்தி விழாவை அக்டோபர் மாதம் 30–ந்தேதி சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

கூட்டத்தில் மாநிலச் செயலாளர் திண்டுக்கல் ஜெயராமன், காசிமாயன், முருகையா, மாலைதுரை, சார்லஸ் சாமி, காஜா மலை கிரி, பூர்ணகுமார், கருப்பையா மணி, மற்றும் மாவட்ட, நகர், பகுதி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img