fbpx
Homeபிற செய்திகள்தேயிலை சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்திய இணைய வர்த்தகம்

தேயிலை சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்திய இணைய வர்த்தகம்

2020-ம் ஆண்டு மே மாதம் துவங்கப்பட்டது முதல் எம் ஜங்ஷன் சர்வீசஸ் லிமிடெட் மூலமாக நிர்வகிக்கப்படுகிற, இந்தியாவின் மிகப்பெரிய பி2பி இணைய-வர்த்தக நிறுவனமான, அசாமில் உள்ள ஜோர்ஹட் தேயிலை ஏல மையம், அசாம் தேயிலையை நாடு முழுவதும் உள்ள நடுத்தர, சிறிய அளவில் கொள்முதல் செய்வோருக்கு மிகவும் எளிமைப்படுத்தி உள்ளது.

இந்த பெருந்தொற்றுக் காலத்தில் இந்திய தேயிலை வாரியத்தின் ஒத்துழைப்புடன் துவங்கப்பட்ட இந்த இணைய- சந்தை தேயிலை வர்த்தகத்தில், சிறிய அளவில் கொள்முதல் செய்வோருக்கான தொழிலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேயிலை வாரியத்திடம் பெறப்பட்டஒரு செல்லத்தக்க உரிமம் உள்ள எந்த கொள்முதல் செய்பவரும் www.emarketplace.teaboard.gov.inஎன்ற இணையத்தில் பதிவு செய்யலாம்.

பதிவு செய்த பின்னர், எம்ஜங்ஷன் இவர்களை உடனடியாகத் தொடர்பு கொண்டு செயல்விளக்கங்களுக்கு ஏற்பாடு செய்வதோடு அவர்களுக்கு தேவைப்படக்கூடிய வேறு உதவிகளையும் செய்கிறது.

எம் ஜங்ஷனின் தலைமை இயக்குநர் வினய் வர்மா கூறியதாவது: இந்த ஆண்டு, பெரிய அளவுகளில் விற்பனை செய்யவும் முக்கியமான மதிப்புக்கூட்டப்பட்ட அம்சங்களையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இதில் தேயிலைத் தொழில்துவங்குவோருக்கு பிளாண்டிங் குறித்த தொழில்நுட்ப புரிதலும், கொள்முதல் செய்வோருக்கு நிதி மற்றும் போக்குவரத்து சார்ந்த எளிமையான நிதியுதவியும் அடங்கும்.

பாரம்பரிய கொள்முதல் மற்றும் விற்பனை முறையானது, இந்த பெருந்தொற்று காரணமாகவும் பெரும்பாலும் டிஜிட்டல்தளங்கள் மூலமாக வேகமாக மாற்றப்பட்டு வரும் சூழ்நிலையில், விற்பனையாளர்கள் மற்றும் கொள்முதல் செய்வோர் ஆகிய இரு தரப்பினரும் இந்த எம்ஜங்ஷனின் இணைய-சந்தையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இது புதிய தேயிலையை வழங்குகிறது. வேகமான விற்றுமுதல் சுழற்சியை வழங்குகிறது. வெளிப்படையான நிதி மற்றும் போக்குவரத்து உதவிகளை வழங்குகிறது.

அசாமின் உயர்ந்த மலைப் பகுதியில் உள்ள அனைத்து முக்கிய போக்குவரத்து சேவை வழங்குவோர், தேயிலை கொள்முதல் செய்வோர் மற்றும் தேயிலைத் தொழிற்சாலைகள் அனைத்துமே இந்த தளத்தில் பதிவு செய்துள்ளன என்றார்.

படிக்க வேண்டும்

spot_img