Homeபிற செய்திகள்தேசிய வேளாண் கணக்கெடுப்பு விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்

தேசிய வேளாண் கணக்கெடுப்பு விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்

தேசிய அளவிலான 11-வது வேளாண்மைக் கணக்கெடுப்பு – 2021 – 22 நடைபெறவுள்ளது. இதற்கு விவசாயிகள் முழுஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நம்நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வேளாண் சாகுபடி குறித்த கணக்கெடுப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப் பின் ஒரு பகுதியான, உலக வேளாண்மைக் கணக்கெடுப்பு நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி, இந்தியாவில் 1970-71-ம் ஆண்டு முதல் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.

10-வது கணக்கெடுப்பு 2015-16-ல் முடிவடைந்து, 2020-21-ல் நடைபெற வேண்டிய 11-வது கணக்கெடுப்பு கொரோனா காரணமாக 2021-22-ல் நடைபெறவுள்ளது.
இக்கணக்கெடுப்பிற்கு மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், வருவாய்த்துறை, புள்ளியியல் துறை அலுவலர்களை உறுப்பினர்களாகவும் கொண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கிராம அளவில் கிராம நிர்வாக அலு வலர்கள் கணக்கெடுப்பாளர்களா கவும், வருவாய்த்துறை மற்றும் புள்ளியியல் துறை அலுவலர்கள் மேற்பார்வையாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்கணக்கெடுப்பு மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது.

முதல் கட்டப் பணியானது செப்டம்பர் 2022ல் துவங்கி டிசம்பர் 2022ல் முடிக்கப்படும். இம்முதல் கட்ட கணக்கெடுப்பின் மூலம், ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள நில உரிமை யாளர்கள், சாகுபடியாளர்களின் எண்ணிக்கையும் அவர்களின் நிலப் பரப்பும் சமூகப்பிரிவும், விவசாயம் செய்யும் முறையும் (தனியாகவோ, கூட்டாகவோ) கிராம நிர்வாக அலுவலர்களால் சேகரிக்கப்படும்.

முதல் கட்டப்பணி நிறைவடைந்த பின்னர், இரண்டாம் கட்டப்பணி ஒவ்வொரு வட்டத்திலும் எதேச்சை முறையில் தேர்விடப்பட்ட 20 சதவிகித கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட சர்வே எண்களில் பயிரிடப்பட்ட பயிர்களின் விவரம், இரகம், நீர்பாய்ச்சப்பட்டதா, மானாவாரியா, நீர்பாய்ச்சும் முறை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும். இரண்டாம் கட்டப்பணி முடிவடைந்த பின்னர் மூன்றாம் கட்டப்பணியாக ஒவ்வொரு வட்டத்திலும் எதேச்சை முறையில் தேர்விடப்பட்ட 7 சதவிகித கிராமங்களில் வேளாண்மைக்கு உபயோகப்படுத்தப்பட்ட இயற்கை / செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், உபயோகித்த விவசாய சாதனங்கள், அரசு மானியம், மண் ணின் தன்மை, விவசாயிகளின் குடும்ப விவரங்கள், பொருளாதார நிலை குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும்.

இவ்விவரங்கள் வேளாண்துறை சார்ந்த கொள்கை மற்றும் திட்டமிடலுக்கும், வேளாண் துறையின் வளர்ச்சி குறித்து ஆரா யவும் முக்கிய பங்களிக்கிறது.
இத்தகவல்கள் முதல் முறையாக கையடக்க கணினி, மடிகணினி அல்லது செல்போன் செயலி மூலம் பதிவு செய்யப்படும். விவசா யிகள் தெரிவிக்கும் தகவல்கள் அனைத்தும் இரகசியமாக பேணப்படும்.

இத்தகவல்கள் அளிப்பதால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதால், கிராம நிர்வாக அலுவலர்களால் கோரப்படும் விவரங்களை வழங்கி இக்கணக்கெடுப்பு சிறப்பாக நடை பெற அனைத்து விவசாயிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.இவ் வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img