fbpx
Homeபிற செய்திகள்தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி ஸ்ரீராமகிருஷ்ணா மாணவருக்கு வெள்ளிப் பதக்கம்

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி ஸ்ரீராமகிருஷ்ணா மாணவருக்கு வெள்ளிப் பதக்கம்

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட் டியில், ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர் தே.நதிஷ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பஞ்சாப் மாநிலம் சண்டிகாரில் உள்ள தேசிய மாணவர் படை பட்டாலியன்-2 சார்பில், தேசிய மாணவர் படை இயக்குநரகங்களுக்கு இடை யிலான தேசிய அள விலான என்.சி.சி. முகாம் சமீபத்தில் நடைபெற்றது.

இதையொட்டி தேசிய மாணவர் படை யினருக்கு இடையிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்தது. இதில் தமிழ்நாடு தேசிய மாணவர் படையைச் சேர்ந்த 17 பேர் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 300 பேர் பங்கேற்றனர்.

இப்போட்டியில் தமிழ் நாடு அணியில் பங்கேற்ற ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் தே.நதிஷ் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஜூனியர் ஆண்களுக்கான 50 மீட்டர் ஓபன் சைட் புரோன் பிரிவில் 600\518 புள்ளிகள் எடுத்தார்.

வெள்ளிப் பதக்கம் வென்ற தே.நதிஷ், தேசிய மாண வர் படை அலுவலர் லெப்டினென்ட் ஈ.விவேக் ஆகியோரை எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயண சுவாமி, கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் ஆகியோர் பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img