கோவை நேரு விளையாட்டு அரங்கில் மாவட்ட கலெக்டர் சமீரன் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நடை ஓட்டத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உள்ளனர்.