fbpx
Homeபிற செய்திகள்மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை- விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை- விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

மாற்றுத்திறனாளி மாணவ/மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின் றன.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மா ணவ/ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித் தொகையும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு 9-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாசிப்பாளர் உதவித் தொகை வழங்கும் திட்டமும் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

எனவே இத்திட்டத்தின் கீழ் 2022-2023-ம் கல்வியாண்டில் கோவை மாவட்டத்தில் கல்வி பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவ/ மாணவிகளிடம் இருந்து கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இக்கல்வி உதவித் தொகை பெறும் மாற்றுத் திறனாளிகள் வேறு துறையின் மூலம் கல்வி உதவித் தொகை பெற்றிருக்கக் கூடாது.

மேற்படி தகுதியுடைய மாற்றுத் திறனாளி மாணவ/மாணவிகள் கோவை மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலு வலகத்தில் கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களைப் பெற்று 08.08.2022-க்குள் உரிய சான்று களுடன் விண்ணப்பித்து இத்திட் டத்தில் பயன்பெறலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img