ஊட்டியில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக் வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை ஈக்வல் ஸ்போர்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த 14 மாணவர்கள் பதக்கம் வென்றுள்ளனர்.
போட்டியை எஸ்ஜி மாஸ்டர் டேக்வாண்டோ மையம் ஏற்பாடு செய்தது. போட் டியில் மொத்தம் 500 பேர் கலந்து கொண்டனர்.
பயிற்சியாளர் பி.பிரதீப் குமாரிடம் பயிற்சி பெற்ற ஈக்வல் ஸ்போர்ட்ஸ் பிரி வில் 14 மாணவர்கள் 11 தங்கம் மற்றும் 3 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
வெவ்வேறு பிரிவுகளின் கீழ் தங்கப் பதக்கம் வென்ற 11 பேரில் நிலா சாய்ஸ்ரீ- பீ-வீ (பெண்கள்); ஸ்ரீதர்ஷன் மற்றும் சத்தியமூர்த்தி- பீ-வீ (பாய்ஸ்); சப்-ஜூனியர் (ஆண்கள்) பிரிவில் பவின் மற்றும் அஸ்வின்; ஜூனியர் (பெண்கள்) பிரிவில் மீனு மற்றும் ஸ்ரீமதி; சீனியரில் கார்த்திக் (பாய்ஸ்); பூம்சேயில் ஸ்ரீமதி மற்றும் கார்த்திக். சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் ஆண்கள் பிரிவில் ஸ்ரீராம், அட்ரியன், சஞ்சய் ஆகியோர் முறையே வெள்ளிப் பதக்கம் வென் றுள்ளனர்.



