Homeபிற செய்திகள்தென்னையில் பண்ணை இயந்திரமாக்கல்: வட்டார அளவிலான விவசாயிகள் பயிற்சி

தென்னையில் பண்ணை இயந்திரமாக்கல்: வட்டார அளவிலான விவசாயிகள் பயிற்சி

கோவை மாவட்டம், சூலூர் வட்டார வேளாண்மை மற்றும் உழவர்நலத் துறையின் வேளாண்மை தொழில்நுட்ப வேளாண்மை முகமை திட்டத்தின் கீழ், செங்கத்துறையில் தென்னையில் பண்ணை இயந்திரமாக்கல் மற்றும் பின்செய் நேர்த்தி மற்றும் மதிப்புகூடுதல் குறித்து வட்டார அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.

சூலூர் வட்டார வேளாண் அலுவலர் பாரதி வரவேற்றார்.
மத்திய வேளாண் பொறியியல் நிறுவன மூத்த விஞ்ஞானி முனைவர் இரா. செந்தில் குமார், தென்னையில் பண்ணை இயந்திரமாக்கல் மற்றும் அறுவடை பின்செய் நேர்த்தி, மதிப்புகூடுதல் பற்றி எடுத்துரைத்தார்.

தற்போதைய வாழ்க்கை முறைக்கேற்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்க ளை புதிய தொழில் முனைப்புடன் ஏற்று மதி தரத்துடன் சந்தைப் படுத்துதலை செய்ய இயலும் என வழி காட் டினார்.

வட்டார தோட்டக்கலை இயக்குனர் சித்ரா பானு, தோட்டக்கலை துறையில் உள்ள தொழில்நுட்பங்கள் குறித்தும் அரசு திட்டங்கள் மற்றும் மானிய முறையில் பயனடைதல் குறித்து கூறினார்.

அதனை சந்தைப்படுத்துதல் குறித்தும் விளக்கமளித் தார். தானிய பயிர்கள் மதிப்புக்கூடப்பட்ட பொருட்கள் விவசாயிகளின் பார்வைக்கு கருத்துக்கட்சி மூலம் வைக்கப்பட்டது.

இப்பயிற்சியில் 45 விவசாயிகள் பங்கேற்றனர். பயிற்சி ஏற்பாடுகளை அட்மா திட்ட பணியாளர்களை தனப்ரியா, சந்தோஷ் ஆகி யோர் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img