Homeபிற செய்திகள்தென்னிந்திய அளவிலான பேட்மிண்டன் போட்டி ஸ்ரீராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் சாம்பியன்

தென்னிந்திய அளவிலான பேட்மிண்டன் போட்டி ஸ்ரீராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் சாம்பியன்

தென்னிந்திய அளவிலான பேட்மிண்டன் போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர்.

76-வது யோனெக்ஸ் சன்ரைஸ் தென்னிந்திய அளவில் மாநிலங்களுக்கு இடையிலான பேட்மிண்டன் போட்டி, கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கொளஞ்சேரி செயின்ட் பீட்டர்ஸ் விளையாட்டு மையத்தில் சமீபத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் கலந்து கொண்ட கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பி.காம். ஐ.பி. இரண்டாமாண்டு மாணவர்கள் ஆர்.ரூபன்குமார், ஏ.ஹரிஹரன் ஜோடி இரட்டை யர் பிரிவில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

இதேபோட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் எம்.காம். ஐ.பி. மாணவர் கே.சதீஷ்குமார், பி.ஏ. ஆங்கிலம் முதலாமாண்டு மாணவி வி.கே.நர்த்தனா ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது.

சமீபத்தில் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள கேமரூன் நகரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பேட் மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், கே.சதீஷ்குமார் சாம்பியன் பட்டம் வென்றார்.

இரட்டையர் பிரிவில் ஆர்.ரூபன்குமார், ஏ.ஹரி ஹரன் ஜோடி வெண் கலப்பதக்கம் வென்றது.தென்னிந்திய மற்றும் சர்வதேச அளவிலான பேட்மிண்டன் போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், பன்னாட்டு வணிகத்துறைத் தலைவர் முனைவர் ஐ.பர்வீன்பானு, உடற்கல்வி இயக்குநர் முனைவர் கே.வடிவேலு ஆகியோர் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img