Homeபிற செய்திகள்தூத்துக்குடி நகரில் காற்றின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு

தூத்துக்குடி நகரில் காற்றின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு

தூத்துக்குடி மா நகராட்சி கூட்டம் மா நகர கூட்டரங்கில் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில நேற்று காலை நடைபெற்றது. ஆணையாளர் சாருஸ்ரீ, துணை மேயர்ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலை வகித்தனர்

கூட்டம் தொடங்கியதும் மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சியில மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பேசினார், தொடர்ந்து கூட்டத்தில், மாநகராட்சியில் புதிய பள்ளி, அங்கன்வாடி கட்டிடம் கட்டுதல், கழிவு நீரில் வரும் கொசுபுழுக்களை ஒழிக்க 27லட்சத்தில் மருந்து கொள்முதல் செய்தல், மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் பகுதி வாரியாக வடிகால் அமைக்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு ஒப்பந்த தாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அனுமதி வழங்குதல், மாநகராட்சி பகுதியில் அவ்வப்போது ஏற்பட்டுவரும் ஆக் கிரமிப்புகளை அகற்ற புதிய ஜே.சி.பி. இயந்திரம் வாங்குதல், மேற்கு மண்டலம் வி.வி.டி.சிக்னல் பகுதியில் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் ரவுண்டானா பகுதியில் நீரூற்று அமைத்து பசுமை புல்தரைகளு டன் அழகுபடுத்தும் பணி, தேசிய தூய காற்று திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தூத்துக்குடி மாநகராட்சிக்கு ஒதுக்கப் பட்ட 2021-&22ஆம் ஆண்டு மானிய தொகை 3.06 கோடியைப் பயன் படுத்தி தூத்துக்குடி நக ரின் காற்றின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல், மாநகர பகுதியில் விபத்து ஏற்படும் பகுதியில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து இரண்டு மடங்கு அபராதம் விதித்தல் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், பாலகுருசாமி, நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரெங்கசாமி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை, சந்திரபோஸ், வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமி சுடலைமணி, மந்திரமூர்த்தி உட்பட அனைத்து கவுன் சிலர்களும், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ்,ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, அதிகாரிகள் ரூபன் சுரேஷ்,பொன்னையா,சரவ ணன், காந்திமதி, பிரி ன்ஸ்,சேகர்,ராமச்சந்திரன் உட்பட அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img