தீபாவளி திருநாளை முன்னிட்டு கோவை மாநகராட்சி 22வது வார்டு பகுதியில் பணியாற்றும் தூய்மை பணி யாளர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கப் பட்டன.
திமுக மாவட்ட துணை பொறுப்பாளர் அசோக், 22-வது வட்ட செயலாளர் த. பிரபாகரன், 22 வது வார்டு திமுக கவுன்சிலர் கோவை பாபு, உள்ளிட்டோர் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் நல உதவி பொருட்கள் வழங்கப்பட்டன.
திமுக பொதுக்குழு உறுப்பினரும் 8 ஆவது வார்டு மாமன்ற உறுப்பி னருமான விஜயகுமார், பொது குழு உறுப்பினர் தேவராஜ், டி.ராம்குமார் வசந்தகுமார், லட்சுமணன் உட்பட கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.