fbpx
Homeபிற செய்திகள்திருப்பூரில் மலபார் கோல்டு டைமண்ட்ஸ் ஷோரூம்

திருப்பூரில் மலபார் கோல்டு டைமண்ட்ஸ் ஷோரூம்

மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம், தமிழகத்தில் புதிய ஷோரூமை திருப்பூரில் திறந்துள்ளது.
ஷோரூமை திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் திறந்து வைத்தார்.


மலபார் கோல்டு டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டல தலைவர் யாசர், மலபார் கோல்டு தமிழ்நாடு மண்டல வணிக தலைவர் சபீர் அலி, மலபார் கோல்டு தமிழ்நாடு வடக்கு மண்டல தலைவர் அமீர் பாபு, மலபார் கோல்டு தமிழ்நாடு மேற்கு மண்டல தலைவர் நௌசாத், மலபார் கோல்டு தமிழ்நாடு தெற்கு மண்டல தலைவர் சுதீர் அகமது, மலபார் கோல்டு சேலம் கிளை தலைவர் ராஜசேகரன், மலபார் கோல்டு திருப்பூர் கிளை தலைவர் பாஹிம், மலபார் கோல்டு ஈரோடு கிளை தலைவர் அஷரப் மற்றும் மலபார் கோல்டு டைமண்ட்ஸ் மேலாண்மை உறுப்பினர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.


ஷோரூமில் அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான ‘மைன்’, பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’, மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட ‘பிரீசியா’ நகைகள், கைவினை கலைஞர்களால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான ‘டிவைன்’ குழந்தைகளுக்கான ‘ஸ்டார்லெட்‘ ஆகியவை இடம்பெற்றுள்ளன.


மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 280 சில்லறை விற்பனை நிலையங்களுடன், உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோயில், திருநெல்வேலி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், இராமநாதபுரம், தர்மபுரி, வேலூர், திருச்சி, கும்பகோணம், திருப்பூர் ஆகிய நகரங்களில் 18 கிளைகளை கொண்டுள்ளது.


மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் 2022 ஆண்டு உலகளாவிய விரிவாக்கத்திற்கு ஆயத்தமாகிறது.

இந்தியா மற்றும் வெளி நாடுகளில் ஜனவரியில் 22 புதிய ஷோரூம்களை துவங்குகிறது.

இந்தியாவில் ஒரு வர்த்தக நிறுவனம் ஒரே மாதத்தில் இவ்வளவு ஷோரூம்களை துவக்குவது இதுவே முதல் முறையாகும்.

படிக்க வேண்டும்

spot_img