fbpx
Homeபிற செய்திகள்திருச்செந்தூருக்கு இரவு நேர ரயில் இயக்க கோவை நாடார் சங்கம் வலியுறுத்தல்

திருச்செந்தூருக்கு இரவு நேர ரயில் இயக்க கோவை நாடார் சங்கம் வலியுறுத்தல்

கோவையில் இருந்து பொள் ளாச்சி, உடுமலை மார்க்கமாக திருச்செந்தூருக்கு இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க மத்திய அரசு நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்ம £னம் நிறைவவேற்றப்பட்டது.

கோவை நாடார் சங்கம் மற்றும் டிரஸ்ட்டின் பொதுக்குழுக் கூட்டம், சங்க திருமண மண்டபத்தில் நடந்தது. சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.
பொதுச்செயலாளர் ஜி.இருதய ராஜா வரவேற்றார். ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.

துணைத் தலைவர் கே.டி.சோமசுந்தரம், ஏ.எஸ்.டேவிட், செயலாளர்கள் ஆர்.அன்புராஜ், பொன்.செல்வராஜ், கே.ஜெ.ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொருளாளர் ஆர்.எஸ்.கணேசன், 2020–&21-ம் நிதி ஆண்டிற்கான வரவு, செலவு கணக்கினை தாக்கல் செய்தார்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கொரோனா தொற்றை அதிரடி நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்திய தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

பனை மரங்களை வெட்ட தடை விதித்ததுடன், பனைத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், ரூ.3 கோடியில் பனை மேம்பாட்டு இயக்கம் அமைத் ததற்காகவும், முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நிறைவு பெற்றவுடன் உண்மையான ஜாதி விகிதாச்சாரப்படி நாடார் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

கோவையில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை மார்க்கமாக திருச்செந்தூருக்கு இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க மத்திய அரசை வலியுறுத்துகிறோம். கோவையில் இருந்து தினமும் இரவு 7.30 மணிக்கு நாகர் கோவிலுக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் நேரத்தை இரவு 10 மணிக்கு மேல் புறப்பட்டுச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

இந்த ரயில் உடன் தூத்துக்குடி லிங் எக்ஸ் பிரஸ் ரயிலையும் இணைத்து இயக்க வேண்டும். பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்து, மத்திய அரசு இறக்குமதி வரியை குறைத்து, விலை உயர்வை குறைக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரயில் விடும் திட்டத்தை விரைவில் துவக்கி, பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணியை துரிதப்படுத்தி, சர்வதேச அளவில் பெரிய விமான நிலையமாக்கி, அதிக விமானங்களை இயக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை துரிதப்படுத்தி, பயன்பாட்டுக்கு கொண்டுவர நட வடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img