Homeபிற செய்திகள்திமுக ஓராண்டு சாதனை தெருமுனைப் பிரச்சாரம்

திமுக ஓராண்டு சாதனை தெருமுனைப் பிரச்சாரம்

கோவை அடுத்த எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கோவில்பாளையத்தில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது

இதில் சிறப்பு விருந்தினராக தலைமை கழக பேச்சாளர் கரூர் முரளி கலந்துகொண்டு சிறப்பு ரையாற்றினார். அப்போது அவர் பேசும் போது, தமிழக முதலமைச்சர் கடந்த ஓராண்டில் பல சாதனைகளை தாண்டி திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார்.

கொரோனா பேரிடர் காலத்தில் 4000 நிதியுதவி, மகளிருக்கு இலவச பேருந்து பயணம், பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை செய்து சிறப்பான ஆட்சியை நமது தமிழக முதல்வர் செய்து வருகிறார், என்றார்.

இந்த நிகழ்ச்சியில் எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி தலைவர் கோமளவள்ளி கந்தசாமி, துணைத்தலைவர் மணி என்கின்ற விஜயகுமார், பேரூர் கழக செயலாளர் சுரேந்திரன், இடிகரை பேரூராட்சி தலைவர் ஜனார்த்தனன், வெள்ளாளப்பட்டி துணைத் தலைவர் ராஜன், பூபதி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.

படிக்க வேண்டும்

spot_img