என்.எம்.சி.டி மற்றும் ராயல் என்பீல்ட் சார்பில் தாளியூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்கள் பையா கவுண்டர் எம்எல்ஏ முன்னிலையில் வழங்கப்பட்டது. அருகில் என்எம்சிடி நிறுவனர் சங்கரநாராயணன், பன்னிமடை ஊராட்சி மன்றத் தலைவர் ரத்தினம் மருதாச்சலம், டாக்டர் சாந்தகுமாரி, அறங்காவலர் நாகரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை என்எம்சிடி ஊழியர்கள் முத்துசாமி மற்றும் ராஜூ ஆகியோர் செய்திருந்தனர்.