தர்மபுரியை அடுத்த பார திபுரத்தில் அமைந்துள்ள கார்த் திகேயன் நர்சரி பிரைமரி பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது இந்த விழாவிற்கு தர்மபுரி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங் டேஸ்வரன் மற்றும் கார்த்திகேயன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி தாளாளர் டாக்டர். அருணகிரி ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்த விழாவில் கிறிஸ்துமஸ் விழாவை பற்றி எடுத்துரைத்த சட்டமன்ற உறுப்பினர் வெங்க டேஸ்வரன், மாணவ மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கிறிஸ்து மஸ் வாழ்த்து கூறினார்.
பின்னர் அரசு பொது சுகாதாரத் துறை சார்பாக தர்மபுரி மாவட்டம் முழுவதும் மக்களுக்காக இரவும் பகலும் பாராமல் கொரோனா ஒழிப்பு பணியில் 238 நாட்கள் சிறப் பாக பணியாற்றிய ஜி.கலையரசி என்ற மாணவிக்கு பத்தாயிரம் ரூபாய் காசோலை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பின்னர் தொழு நோய் கண்டறிவதில் சேவை புரிந்த மாணவிகள் கவினா, கோ பிகா ஆகியோருக்கு சட்டமன்ற உறுப்பினர் நினைவு பரிசு வழங்கினார்.
முன்னதாக, நேரு யுவ கேந்திரா சார்பில் எதிர்கால இந்தியா என்ற தலைப்பில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் அனைத்து துறை பள் ளிகள் மற்றும் கல்லூரிகளில் கட்டுரை போட்டிகள் நடைபெற்றது.
அந்த கட்டுரைப் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற ஸ்ரீ கிருஷ் ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவி சத்யாவுக்கு கல்லூரியின் சார்பாகவும் சட்டமன்ற உறுப்பினர் சார்பாகவும் கார்த்திகேயன் பள்ளி தாளாளர் சார்பாகவும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ, -மாணவிகள் மற்றும் கார்த்திகேயன் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் ஒன்றிணைந்து கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கல்லூரி மாணவ மாணவிகள் கிறிஸ் துமஸ் தாத்தா வேடம் அணிந்து அசத்தினர்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் தொழுநோய் பிரிவு நாகராஜ், சுகாதார ஆய்வாளர்கள் இளவரசு, கார்த்திகேயன், சுகாதார மேற்பார் வையாளர் மதியழகன், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் ஜெகதீஸ்வரி, மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், மாவட்ட செவிலியர் சங்க தலைவி ராஜேஸ்வரி, கார்த்திகேயன் பள்ளி நிர்வாக அலுவலர் சுகுணா, விழா ஒன்றிணைப்பாளர் ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி பேராசிரியர்கள் மகேஸ்வரி, ரஞ்சிதா, கல்லூரி முனைவர் பொன்னம்பலம், கல்லூரி நிர்வாக அலுவலர் ஜோதிபாசு, கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் லாவண்யா, துணைப் பேராசிரியர் ஜி.கலையரசி உள்ளிட் டார் பங்கேற்றனர்.
இறுதியாக ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி தாளாளர் பி.கிருஷ்ணமூர்த்தி அனை வருக்கும் நன்றி கூறி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள் கூறினார்.



