Homeபிற செய்திகள்தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம் செல்லியம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம் செல்லியம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டமானது குடியரசு நாள் (26, ஜனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது.

இந்தக் கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வை ஊக்குவித்தல், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல் மற்றும் பயனாளிகளின் விருப்பத்தின்படி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தலே கிராம சபைக் கூட்டத்தின் நோக்கமாகும்.

தமிழக அரசின் உத்தரவின்படி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செல்லியம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, துணைத்தலைவர் குமுதா, கவுன்சிலர்கள் சகாயராணி, மகிமைநாதன், துணைத் தலைவர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அது சமயம் செல்லியம்பட்டி ஊராட்சியை சேர்ந்த ஊர் பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர், கிராம செவிலியர்கள், நியாய விலை கடை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், ஊட்டச்சத்து அமைப்பாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img