தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஊரகத் தொழித்துறை அமைச்சர் அன்பரசன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத் தலைமைச் செயல் அலுவலர், பட்டு வளர்ச்சித் துறை இயக்குநர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.