fbpx
Homeபிற செய்திகள்தமிழக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பலன் தரும் திட்டங்கள்: அமைச்சருடன் கலந்துரையாடல்

தமிழக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பலன் தரும் திட்டங்கள்: அமைச்சருடன் கலந்துரையாடல்

1945-ம் ஆண்டு துவக்கப்பட்ட ஹிந்துஸ்தான் சேம்பர் ஆப் காமர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த உறுப்பினர்கள் தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனுடன் விவாதித்தனர்.

மத்திய அரசின் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு என்னும் திட் டம் மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வருகி றது. இந்தத் திட்டத்தைக் கண்காணிக்க மாவட்ட அளவில் ஒரு குழுவை நியமிக்கலாம்.

ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் மற்றும் பிற வர்த்தக சபைகளுடன் இணைந்து ஒவ்வொரு ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்புக்கும் ஒரு பிரத்யேக இணைய போர்ட்டலை வழங்கி இந்த திட்டத்தை ஊக்கு விக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்த திட்டத்தை மத் திய அரசின் ‘உபர்தே சிதாரே’ திட்டத்துடன் இணைக்கலாம் என்று பரிந்துரைத்த அவர்கள், இது சாம்பியன் ஏற் றுமதியாளர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் திட்டம் என்று அவர்கள் கூறினர்.

இதற்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள தாகவும் அவர்கள் கூறினர்.
அமைச்சருடன் பேசியது குறித்து ஹிந்துஸ்தான் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் சிஏ.கே. சுரேஷ் கூறுகையில், முதல் தலைமுறை தொழில் முனைவோரை ஊக் குவிக்க நீட்ஸ் மற்றும் யுஒய்இஜிபி திட்டங்களை பரிந்துரைப்பதோடு அதை எம்எஸ்டிசிஜிஇ திட்டங்களுடன் இணைத்து வங்கிகள் அவர்களிடம் கூடுதல் பிணைய சொத்துகளை வலியுறுத்தாமல் அவர்களின் வளர்ச்சிக்கு உத விட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

மூலதனம் மற்றும் ஜெனரேட்டர் மானியம் போன்ற மானியத் திட்டங்கள், முன்பு மானியத்தைப் பெறாத ஏற்கனவே உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் வணிகத்தை விரிவுபடுத் தவும் வளர்க்கவும் கூடுதல் நன்மையை இந்தத் திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது என்றார்.

ஹிந்துஸ்தான் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் சிஏ.கே. சுரேஷ், பதவி ஏற்க உள்ள இதன் த¬ லவர் வி. நாகப்பன், துணைத் தலைவர் விஜய் பி. சோர்டியா, பொருளாளர் ரியாஸ் ரசாக், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் குழு தலைவர் ஆனந்த் ராஜகோபால், ஹிந்துஸ்தான் சேம்பர் ஆப் காமர்ஸ் செயலாளர் கே.ஜி. சித்ரா ஆகியோர் அமைச்சரை சந்தித்து பேசினர்.

படிக்க வேண்டும்

spot_img