நடிகர் தனுஷ் பிறந்த தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாக ஆதரவற்ற பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நடிகர் தனுஷ் தனது பிறந்த தினத்தை நேற்று (ஜூலை 28) கொண்டாடினார்.
கோவை மாவட்ட தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாக, தனுஷ் பிறந்த நாளையொட்டி, காலை முதலே கிழக்கு நகரம், துடியலூர் நகரம் மற்றும் பகுதி, மேட்டுப்பாளையம், சிங்கை நகரம் மற்றும் பகுதி, கவுண்டம்பாளையம், தீத்தி பாளையம், பொள்ளாச்சி உட்பட பல்வேறு பகுதி நிர்வாகிகள் சார்பாக கோவில்களில் சிறப்பு பூஜை, இரத்த தானம், நலத்திட்ட உதவிகள், அன்னதானம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கோவை மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில், டி.வி.எஸ்.நகர் இடையர்பாளையம் பகுதியிலுள்ள நிழல் ஆதரவற்றோர் சிறுமியர் இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகையை இல்ல நிர்வாகி சுதா ராஜிடம் வழங்கினர்.
சங்க நிர்வாகிகள் கூறுகையில், ஐந்து வருடம் தொடர்ந்து இந்த இல்லத்திற்கு கல்வி உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டு கடந்த வருடம் இத்திட்டம் துவங்கப்பட்டது.
தற்போது இரண்டாவது வருடமாக செயல்படுத்தி வருகிறோம் என்றனர்.
நிகழ்ச்சியில், கோவை மாவட்ட தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்ற நிர்வாகிகள் மணி, அருள்முருகன், அந்தோணி, வினோத்குமார், ராஜ்குமார், பழனி குமார், ராஜேஷ் கண்ணா மற்றும் மணிகண்டன் வெள்ளைச்சாமி விக்னேஷ் ராஜா, ராஜா சிங்கம் உட்பட பல்வேறு பகுதி கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



