fbpx
Homeபிற செய்திகள்டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை முதல்ர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சந்தித்து பேசினார். இரண்டு நாள் பயணமாக தலைநகர் டெல்லிக்கு வந்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்று சந்தித்து வந்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உடனான இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் உடனிருந்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் காலை சென்னையில் இருந்து தலைநகர் டெல்லிக்கு வந்தார். நேற்று மாலை சுமார் 5 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாகவே சந்தித்தார். 25 நிமிடங்கள் அந்த சந்திப்பு நடைபெற்றது. அச்சமயம் தமிழகத்தின் நலத்திட்ட வளர்ச்சிகள் குறித்து பிரதமரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டன. அதன் பிறகு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கியிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை சரியாக 10 மணியளவில் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர், டெல்லியில் உள்ள தமிழ்நாடு பழைய இல்லத்தை பார்வையிட்டார். பின்னர் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார். தனது இல்லத்திற்கு வருகை புரிந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை சோனியா காந்தி வரவேற்றார். மு.க.ஸ்டாலினுடன் அவரது துணைவியார் துர்காவும் சென்றிருந்தார்.

பின்னர் தமிழக முதல்வராக பதவி ஏற்றதற்கு அவருக்கு சோனியா காந்தி வாழ்த்து தெரிவித் தார். முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக சோனியா காந்தியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பானது நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம்: ராகுல் முதல்வர் மு.க.ஸ்டாலின், சோனியா காந்தி, ராகுல் காந்தியை இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
சந்திப்பிற்குப் பின்னர் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி என்றும் தமிழ் மக்களுக்கான ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டமைக்க திமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img