Homeபிற செய்திகள்டெலிமெடிக்கல் செக்-அப்புக்கு டேர்ம் இன்சூரன்ஸ் திட்டங்கள்

டெலிமெடிக்கல் செக்-அப்புக்கு டேர்ம் இன்சூரன்ஸ் திட்டங்கள்

இந்தியாவில் டேர்ம் இன்சூரன்ஸ் காப்பீடு செய்யத் தயாராக இருக்கும் என்.ஆர்.ஐ. வாடிக்கையாளர்களுக்கு புவியியல் எல்லைகள் இனி ஒரு தடையாக இருக்காது.

அவர்கள் வசிக்கும் நாட்டிலிருந்தபடியே வீடியோ அல்லது டெலிமெடிக்கல் செக்-அப் மேற்கொள்ள அனுமதிக்கும் டேர்ம் இன்சூரன்ஸ் திட்டங்களை இந்தியாவில் மேற்கொள்வதை அவர்கள் இப்போது தேர்வு செய்யலாம்.

காப்பீட்டுக் கொள்கைகளை அண்டர்ரைட்டிங் செய்வதில் தொழில்நுட்பத்தின் பங்கை பெருந்தொற்று மறுவரையறை செய்துள்ளது.

இந்தத் திட்டங்களை என்.ஆர்.ஐ.கள் ஆன்லைனில் தேடி, தங்களின் தேவைகளுக்கு ஏற்ற ஒன்றைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திசெய்து பெற முடியும்.

நெட் பேங்கிங் அல்லது கிரெடிட் / டெபிட் கார்டுகள் மூலமாகவும் ஆன்லைனில் பிரீமியம் கட்டணத்தை செலுத்தலாம்.

இது முடிந்ததும், ஒருவரின் மருத்துவ வரலாறு மற்றும் ஏற்கனவே இருக்கும் நோய்கள் சார்ந்த ஆவணங்களின் அடிப்படையில் வீடியோ அல்லது டெலிமெடிக்கல் பரிசோதனை பதிவுசெய்யப்படும்.

நீங்கள் சமர்ப்பித்த அறிக்கைகளுக்கு இன்சூரர் நிறுவனம் அனுமதி கொடுத்தவுடன், உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாலிசி வழங்கப் படும்.

காப்பீட்டின் நேரடி வடிவமாகக் கருதப்படும் டேர்ம் இன்ஷூரன்ஸ், வருமானம் ஈட்டும் குடும்ப உறுப்பினருக்கு திடீர் மரணம் ஏற்பட்டால், அவரைச் சார்ந்திருப்பவர்களைப் பாதுகாப்பதற்கு அவசிய மாகிறது.

பல்வேறு நாடுகளில் வசிக்கும் என்.ஆர்.ஐ.களின் குடும்பத்திற்கு நிதி ரீதியாக வலுவான எதிர்காலத்தை உறுதிசெய்வதற்கு இந்த திட்டம் மிகவும் முக்கி யத்துவம் வாய்ந்தது.

அவர்கள் இல்லாமல் போகும் நிலையிலும்கூட கூடுதல் பாதுகாப்பை டேர்ம் இன் சூரன்ஸ் வழங்குகிறது.

டெலிமெடிக்கல் பரிசோதனைகள் மூலம், உலகின் வேறு நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான என்.ஆர்.ஐ.களுக்கு காப்பீடு செய்யும் நடைமுறை அதிக பிரச்சினை இல்லாததாகவும், தொந்தரவு இல் லாததாகவும் மாறியுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img