fbpx
Homeபிற செய்திகள்டச் பேனலுடன் பிரண்ட் லோடு வாஷிங் மெஷின்- ஹேயர் அறிமுகம்

டச் பேனலுடன் பிரண்ட் லோடு வாஷிங் மெஷின்- ஹேயர் அறிமுகம்

உலகின் நம்பர் 1 பிராண்டாக புகழ்பெற்றிருக்கும் ஹேயர், செயற்கை நுண்ணறிவுத் திற னுடன் கூடிய புரட்சிகரமான, புதிய 979 ஃபிரண்ட் லோடு வாஷிங்மெஷின் சீரிஸ்-ன் அறிமுகத்தை அறிவித்திருக்கிறது.

இதில் மிக நவீன, சத்தமே எழுப்பாத டைரக்ட் மோஷன் மோட்டர் மற்றும் 52.5 செ.மீ. என்ற பெரிய அளவிலான டிரம் இடம்பெற்றிருக்கிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படுவது, இந்தியாவிற்காக தயாரிக்கப்படுவது என்ற தனது குறிக்கோளை செயல்படுத்தும் வகையில் இந்நிறுவனம் புதுயுக தொழில்நுட்பங்களுடன் ப்ரீமியம் சலவை மற்றும் ஆடைகள் பராமரிப்பிற்கு AI, மற்றும் IoT திறன் கொண்ட சலவைத் தீர்வுகளை இதன்மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறது.

இதுவரை இல்லாத புதிய புத்தாக்கங்களைக் கொண்ட டைரக்ட் மோஷன் மோட்டார் பொருத்தப்பட்ட சூப்பர் டிரம் 979 சீரிஸ் வாஷிங் மெஷினை உங்கள் வசதிப்படி ஒரு வாய்ஸ் கமாண்டு (குரல் வழி கட்டளை) மூலம் எளிதாகப் பயன்படுத்த முடியும்.

ஹேயர் அப்ளையன்சஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் என்.எஸ். சதீஷ் கூறியதாவது:

நுகர்வோர் வசதி மீது ஆழமான பொறுப்புறுதியும் மற்றும் அவர்களது தினசரி வாழ்க்கையை வசதியானதாக ஆக்குவதற்கு புத்தாக்கங்களைப் பகிர்ந்து, உத்வேகம் அளிப்பதிலும் தளராத ஆர்வமும் கொண்டு செயல்படுகிறோம். எமது இந்த புதிய IoT திறன் கொண்ட ஃபிரண்ட் லோடு 979 IoC வாஷிங் மெஷின், புத்தாக்கத்தில் ஒரு புரட்சிகர தயாரிப்பாகும்.

செயற்கை நுண்ணறிவில் முன்னேற்றங்களை சிறப்பாக பயன்படுத்தும் இது, நுகர்வோர்களுக்கு எளிமையான, நுண்ணறிவான மற்றும் பிரத்யேக சலவைத் தீர்வுகளை வழங்குகிறது.

இந்த புதிய அணிவரிசை வாஷிங் மெஷின்கள் நுகர்வோர்களின் வாழ்க்கை முறைகளை மேலும் மேம்படுத்தும். நாடெங்கிலும் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று நம்புகிறோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img