fbpx
Homeபிற செய்திகள்ஜேகே டயர் எப்எம்எஸ்சிஐ சாம்பியன்ஷிப் போட்டி: நோவிஸ் கோப்பையில் சேத்தன் சுரினேனி முதலிடம்

ஜேகே டயர் எப்எம்எஸ்சிஐ சாம்பியன்ஷிப் போட்டி: நோவிஸ் கோப்பையில் சேத்தன் சுரினேனி முதலிடம்

கோவையில் நடைபெற்ற 25-வது ஜேகே டயர் எப் எம்எஸ்சிஐ நேஷனல் ரேசிங் சாம்பியன்ஷிப் போட்டியில், ஜேகே டயர் நோவிஸ் கோப்பையில் 2 ரேஸ்களில் சேத்தன்சுரி னேனி முதலிடம்பெற்றனர்.

கோவையில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் எல்ஜிபி பார்முலா 4, ஜேகே டயர் நோவிஸ் கோப்பை, ஜேகே டயர் வழங்கும் ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி கோப்பை, ஜேகே டயர் பிரசண்ட்ஸ் என்டுரன்ஸ் லீக் கப் நடந்தது.

முதலில் ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி கோப்பையின் ரேஸ் 2 தொடங்கியது. இது சுமூக மாகத் தொடங்கியது. ஆனால் நேற்று முதலிடம் பெற்ற அனிஷ் டி ஷெட்டி கட்டுப்பாட்டை இழந்து பாதியிலேயே ஓய்வு பெற்றார்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட நவநீத் குமார் முதலிடத்தைப் பிடித்தார்.
பிரிவு வாரியாக, புரோ பிரிவில், நவநீத் முன்னிலை பெற்றார். ஆல்வின் 2-வது இடத்தையும், உல்லாஸ் எஸ். நந்தா 3-வது இடத்தை யும் பிடித்தனர்.

அமெச்சூர் பிரிவில் சூர்யா தொடர்ந்து முன்னிலை வகித்தார். வருண் கவுடா 2-வது இடத் திலும், பிரதீப் சி 3-வது இடத்திலும் உள்ளனர்.

ஜேகே டயர் நோவிஸ் கோப்பையின் ரேஸ் 3 உடனடியாக தொடங்கி யது. ரேஸ் 2-ல் முதலிடம் பிடித்த மொமென்டம் மோட்டார் ஸ்போர்ட்ஸின் அர்ஜுன் சியாம் நாயர், அமன் நாக்தேவின் காரில் மோதி கவிழ்ந்ததால் ஏமாற்றம் அடைந்தார்.

டிடிஎஸ் ரேசிங் ஜோடிகளான வினித் குமார், ஜோயல் ஜோசப் ஆகியோர் முறையே 2-வது, 3-வது இடத்தைப் பிடித் தனர். அர்ஜுனின் சக வீரர் சேத்தன் சுரினேனி, வியக்கத்தக்க ஓட்டத்தை வெளிப்படுத்தி மேடையில் முதலிடத்தை பிடித்தார்.

எல்ஜிபி பார்முலா 4-ன் ரேஸ் 2 தொடங்கியது. அனுபவமிக்க வீரர்கள் இறுதி வரை கைவிடாது போராடினர். கடுமையான போட்டியில் விஸ்வாஸ் விஜயராஜ் முதல் இடத்தை பிடித்தார்.

அஹுரா ரேசிங்கின் அமீர் சயீத் இறுதியாக இந்த சீசனில் 2-வது இடத்தைப் பிடித்த தன் மூலம், தனது கணக்கை துவக்கினார். எம்எஸ்போர்ட்டின் விஷ்ணு பிரசாத் 3-வது இடத்தைப் பிடித்தார்.

2-ம் நாள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் தனித்துவமான பந்தயத்தை கொண்டிருந்த ஜேகே டயர் பிரசண்ட்ஸ் எண்டூரன்ஸ் லீக் கோப்பை நடந்தது. இது கடந்த மாதம் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

250 சிசி பைக்குகளில் 60 நிமிடங்களுக்கு இடைவிடா மல் இரண்டு ரைடர்கள் கொண்ட 20 அணிகள் பந்தயத்தில் ஈடுபட்டனர். இதில் அபிஷேக் வாசுதேவ், அமர்நாத் மேனன் ஜோடி மேடையில் முதலிடத் தையும், ரோஹித் லாட், அபினவ் ஜி 2-வது இடத் தையும், பிரபு வி, சர்வேஷ் ஹமுன்னாவர் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

ஒரு மணி நேர பந்தயம் முடிவடைந்தவுடன், ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி கோப்பையின் ரேஸ் 3 துவங்கியது. இந்த முறை ரேஸ் 2 டாப்பர் நவநீத் குமார், துரதிர்ஷ்டவசமாக நடுவழியில் வீழ்ச்சியடைந்தார்.

இது ஆல்வின் சேவியர் முதலிடத்தைப் பிடிக்க பொன்னான வாய்ப்பாக மாறியது. அதே நேரத்தில் சுதீர் சுதாகர், மேகா விதுராஜ் ஆகியோர் முறையே 2 மற்றும் 3-வது இடத்தைப் பிடித்தனர்.

அமெச்சூர் பிரிவில் சூர்யா தொடர்ந்து முதலிடத்தில் இருந்தார். வருண் கவுடா, பிரதீப் சி மீண்டும் முறையே 2, 3-வது இடத்தைப் பிடித்தனர்.

ஜேகே டயர் நோவிஸ் கோப்பையின் ரேஸ் 4-ல் கடுமையான போட்டிக்கு இடையில் மொமெண்டம் மோட்டார் ஸ்போர்ட்ஸின் சேத்தன் சுரினேனி முதலிடம் பிடித்தார்.

ஹாஸ்டன் பெர்ஃபார்மன் ஸின் ஆதித்யா பரசுராம் மேடையில் 2-வது இடத்தைப் பிடித்தார். அவரது சக வீரர் அதீத் பராஷர் 3-வது இடத்தைப் பிடித்தார்.

மார்சேயில் நடந்த உலக மோட்டார் ஸ்போர்ட் கேம்ஸ் காரணமாக இந்தச் சுற்றைத் தவறவிட்ட கைல் குமரனை விட ஆதித்யா பரசுராம் 10 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img