27 வது தேசிய அளவிலான ‘தாங்-டா’ சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் டிசம்பர் 18 முதல் 22வரை நடந்தது. இதில் தமிழக அணி சார்பாக கோவை புலியகுளம் இம்மார்டல் ஸ்போட்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற மாணவ மாணவியர் 5 பேர் பங்கேற்றனர்.
ஏ.கே.நேத்ரா ஸ்ரீ ((MCH SÅ வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி&6ம் வகுப்பு) இரண்டாவது சுற்றில் வெற்றி வாய்ப்பை இழந்தார். சப்ஜூனியர் பாய்ஸ் -45 கிலோ பிரிவில் வித்யா நிகேதன் சிபிஎஸ்சி பள்ளி மாணவர் தருண் – – வெண்கல பதக்கம் வென்றார்.
சப்ஜூனியர் 49 கிலோபிரிவில் ஸ்டேன்ஸ் சிபிஎஸ்சி பள்ளி மாணவன் ஜெயசிம்மன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
சப்- ஜூனியர்களுக்கான பெண்கள் பிரிவில் எஸ்எஸ்விஎம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 7ம் வகுப்பு மாணவி கீதாஞ்சலி இரண்டாவது சுற்றில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறி வியல் கல்லூரி,முதலாம் ஆண்டு பிபிஏ&சிஏ மாணவி மிருதுளா காலிறுதி சுற்றில் வெற்றி வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
இந்த அணியினர் கோவை மாவட்ட பயிற்சியாளர் சரண்ராஜ் தலைமையில் போட்டிகளில் பங்கேற்றனர்.
தமிழகம் சார்பில் போட்டிகளில் பங்கேற்ற இம்மாணவர்கள் 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
கோவை திரும்பிய சாதனை மாணவ மாணவியரை விமான நிலையத்தில் கோவை மாவட்ட ‘தாங்-டா’ கழக செயலாளர் டாக்டர் செல்வகுமார் மற்றும் பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதேபோல தமிழக அணி சார்பாக கோவை புலியகுளம் டி1 காவல் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்ற வளாகத்தில் பயிற்சி பெறும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் 10 பேர் பங்கேற்றனர்.
சப் ஜூனியர்களுக்கான ஆண்கள் பிரிவில் மாணவர் ஸ்ரீ வர்ஷன் 41 கிலோ எடைப்பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார். மாணவர் மோனிஷ் 45 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.
மாணவர் கிரிஷ் ரோஷன் 50 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். சப் ஜூனியர்களுக்கான பெண்கள் பிரிவில் மாணவி கீதாஞ்சலி 33 கிலோ எடைப் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார்.
மாணவி மேரி பிரியதர்ஷினி 53 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.
கோவை ராமநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் இவர் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூனியர்களுக்கான ஆண்கள் பிரிவில் ராகுல் 80 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.
அதேபோல ஜூனியர்களுக்கான பெண்கள் பிரிவில் மாணவி மித்ரா 75 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். சீனியர்களுக்கான ஆண்கள் பிரிவில் மாணவர் சரண்ராஜ் 50 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்த அணியினர் மாநில ‘தாங்-டா’ கழக செயலாளர் செல் வராஜ் ஆசான் மற்றும் கோவை மாவட்ட பயிற்சியாளர் ரஞ்சித் குமார் தலைமையில் போட்டிகளில் பங்கேற்றனர்.
தமிழகம் சார்பில் இப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவியர், மொத்தம் 2 தங்கம், 5 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
சாதனை மாணவ மாணவியர் கோவை வந்தபோது அவர்களுக்கு ரயில்நிலையத்தில் கோவை மாவட்ட ‘தாங்-டா’ கழக செயலாளர் டாக்டர் செல்வகுமார் மற்றும் டி1 காவல் ஆய்வாளர் தேவேந்திரன் மற்றும் பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.



