fbpx
Homeபிற செய்திகள்ஜனவரி 2ல் கோவை விழா துவக்கம்: சின்னம் வெளியீடு

ஜனவரி 2ல் கோவை விழா துவக்கம்: சின்னம் வெளியீடு

14வது கோவை விழா வரும் ஜனவரி மாதம் 2 ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், விழாவிற்கான முன்னோட்ட நிகழ்ச்சியாக, மேஸ்காட் எனப்படும் சின்னம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

கோவையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாகவும், கோவை மக்களிடையே, மாவட் டத்தின் பெருமைகளை, கலாச்சார நிகழ்வுகளை எடுத்துக்காட்டும் வி மாகவும், கடந்த 2009ம் ஆண்டு முதல் கோயம்புத்தூர் விழா என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

ஜனவரி முதல் வாரத்தில் துவங்கி நடைபெறும் இந்நிகழ்வின் போது, பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நாள் தோறும் நடத் தப்படுவது வழக்கம்.

2020ம் ஆண்டு சிறப்பாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில் 2021ம் ஆண்டில் கொரோனா பெருந் தொற்று காரணமாக இந்நிகழ்ச்சி வர்ச்சுவல் எனப்படும் மெய் நிகர் நிகழ்ச்சியாக மட்டுமே நடத்தப் பட்டது.

இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால், இவ்வாண்டு சமூக இடைவெளியை கடைபிடிப்ப தோடு, சிறப்பான முறையில் கொண்டாட விழாக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இதன்படி 14வது ஆண்டாக நடைபெறும் இவ்விழாவை ஒட்டி வருகிற ஜனவரி 2ம் தேதி முதல் ஜனவரி 9ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் அரங்குக ளிலும், பொது இடங்களில் இந் நிகழ்வுகள் நடத்தப்பட்ட நிலையில், இவ்வாண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செம்மைப்படுத்தப்பட்டுள்ள குளக்கரைகளில் இந்நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

கலை, கல்வி, தொழில், விளையாட்டு, பொழுதுபோக்கு, வணிகம் மற்றும் விருந்தோம்பல் போன்ற நிகழ்வுகள் இந்நிகழ்வில் இருக்கும் என விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதையொட்டி இவ்விழாவிற் கான முன்னோட்ட நிகழ்ச்சி, கோவை வாலாங்குளம் குளக்கரை பூங்காவில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு, விழாவிற்கான மேஸ்காட் எனப்படும் சின்னத்தை அறிமுகப்படுத்தினர்.

சிக்கூ என பெயரிடப்பட்டுள்ள இந்த சின்னம், தமிழ்நாடு மாநில பறவையான மரகதப் புறாவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா பேசுகையில், “இது போன்ற விழாக்கள், பெருநகரங்களின் அடையாளமாக மாறும். இதன் மூலம் அந்த குறிப்பிட்ட நகரம் குறித்த பெருமைகள் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வாய்ப்பு கிடைக்கும்.” என்றார்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசு கையில், “அரசு நடத்தும் விழாக் களைக் காட்டிலும், நகரின் தொழில்துறையினர், மக்களை இணைத்து நடத்தப்படும் இந்நிகழ்வுகள், பெரும் உற்சாகத்தை அளிக்கிறது.

பொது இடங்களில் இதுபோன்ற விழாக்கள் நடத் தப்படுவது மகிழ்ச்சி அளிக் கிறது” என் றார். கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக மின்சார வாகனங்களின் கண்காட்சி, உல கத்தரம் வாய்ந்த வண்ணஒளி காட்சிகள், சாலைகளில் வண்ணம் பூசுதல், சமையல் போட்டிகள், மாரத்தான் போட்டி, சைக்கிள் போட்டி ஆகியவை நடைபெற உள்ளது.

இவ்வாண்டு முதல் முறை யாக மாற்றுத்திறனாளிகளும் பங்கு பெறும் பாராலிம்பிக்ஸ் போட் டிகள், விவசாய கண்காட்சி, கல்லூரி மாணவர்களின் இசை நிகழ்ச்சிகள் ஆகியவையும் இடம்பெற உள்ளது.

மேலும் புதிய தொழில் முனைவோரை ஊக்கப்படுத்த சிறப்பு தொழில் நிகழ்ச்சி உள்ளிட்ட 120 வகையான நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img