கோவை ஒண்டிப்புதூர், நெசவாளர் காலனி பகுதியில் பாதாள சாக்கடை பிரதான குழாய் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இதில் சோதனை ஓட்டம் நடத்தி 2300 குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார்.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா நேற்று (டிச.2) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.65-க்கு உட்பட்ட இராமநாதபுரம் சிக்னல் அருகில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள், பிரதான குழாய் அமைக்கும் பணிகள், வார்டு எண்.66-க்கு உட்பட்ட சிங்காநல்லூர் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் சோதனை ஓட்டத்தை ஆணையாளர் பார்வையிட்டார்.
கழிவு நீர் பண்ணையின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீரை விவசாயத்திற்கு பயன் படுத்தப்பட்டு வருவது குறித்து பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தார்.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் 3-ன் கீழ் ரூ.143 கோடி மதிப்பீட்டில் மணியகாரன்பாளையம் முதல் ஒண்டிப்புதூர் வரை 22.1 கி.மீ. தொலைவிற்கு பாதாள சாக்கடை பிரதான குழாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போது திருச்சி சாலையில் 5 கி.மீ. தொ லைவிற்கு பணிகள் நடக் கின்றன.
இதில் 2 கி.மீ. தொலைவிற்கு பாதாள சாக்கடை பிரதான குழாய் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன.
மேலும் 24 மணி நேர குழாய் அமைக்கப்பட்டுள்ள இடத்தையும், 3 கி.மீ. தொலைவிற்கு குழாய் அமைக்கப்பட உள்ள இடத்தையும் ஆணையாளர் பார்வையிட்டார்.
ஒண்டிப்புதூர், நெசவாளர் காலனி பகுதியில், பாதாள சாக்கடை பிரதான குழாய் அமைக்கும் பணி கள் நிறைவு பெற்றுள்ளன.
தற்போது சோதனை ஓட்டம் நடத்தி 2300 குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண் டும்.
அதன் பின்னர் பொதுமக்கள் பயன்ப £ட்டிற்கு கொண்டு வர வேண்டும் என ஆணை யாளர் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, மாநகரப் பொறியாளர் (பொ) ராமசாமி, கிழக்கு மண்டல உதவி ஆணையர் செந்தில்குமார் ரத்தினம், நிர்வாக பொறியாளர் (பாதாள சாக்கடை திட் டம்) உமாதேவி, உதவி நிர்வாக பொறியாளர் சசிப்பிரியா, உதவி செயற் பொறியாளர் சுந்தர்ராஜன், மண்டல சுகாதார அலுவலர் முருகா, உதவி செயற்பொறியாளர்கள் எழில், ஃபெர்மன் அலி, சத்யா, ரவி உள்ளிட்டோர் இருந்தனர்.



