fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீராமகிருஷ்ணா கலைக் கல்லூரியில் சர்வதேச தரத்திலான பேட்மிண்டன் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு

ஸ்ரீராமகிருஷ்ணா கலைக் கல்லூரியில் சர்வதேச தரத்திலான பேட்மிண்டன் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு

ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில், சர்வதேச தரத்திலான பேட்மிண்டன் உள் விளையாட்டரங்கம் நேற்று (டிச.2) திறக்கப்பட்டது.

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் அ¬ மக்கப்பட்டிருந்த சர்வதேச தரத்திலான பேட்மிண்டன் உள் விளையாட்டரங்கம் திறப்பு விழாவுக்கு தலைமை வகித்து, திறந்து வைத்தார் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி.

சர்வதேச அளவிலான பேட்மிண்டன் போட்டியில் வெள்ளி உள்ளிட்ட பதக்கங்கள் வென்ற, ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாண வர்கள் சதீஷ்குமார், ஆத்யா வாரியார், சஞ்சய் ஸ்ரீவத்சவா ஆகியோரை எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி, இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

விழாவில், எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அலுவலர் சி.வி.ராம்குமார், கல்லூரி முதல்வர் மற்றும் செயல் முனைவர் பி.எல்.சிவகுமார், உடற்கல்வி இயக்குநர் முனைவர் கே.வடிவேல், ஸ்ரீராமகிருஷ்ணா மெட் ரிக் பள்ளி முதல்வர் ரவி, ஸ்ரீராமகிருஷ்ணா சி.பி. எஸ்.இ.பள்ளி முதல்வர் பிரசில்லா ராணி ஆகியோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img