கோவை அருகே உள்ள சோமையனூர் எலியா மறுவாழ்வு மையத்தில் நலிந்த முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் பேராயர் டாக்டர் டி.ஸ்டான்லி பீட்டர் தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது: எம்டிஎம்டி என்ற தன்னார்வ அமைப்பு சார்ந்த எலியா மறுவாழ்வு மையம் கடந்த பல ஆண்டுகளாக ஆதரவற்றவர்களுக்கும் வயது முதிர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி செய்து வருகிறது.
சொந்த இடவசதி இல்லாத இந்த மறுவாழ்வு மையத்துக்கு சோமையனூர் பகுதியில் அரை ஏக்கர் நிலம் ஒதுக்கி பட்டா வழங்கவேண்டும் என தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு டி.ஸ்டான்லி பீட்டர் பேசினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட மறுவாழ்வுத் துறை அலுவலர் ஜி.வசந்தகுமார் பங்கேற்று கிறிஸ்துமஸ் கேக் வெட்டினார்.
முன்னாள் ஊராட்சித்தலைவர் சோமையனூர் வி.கே.சுந்தர்ராஜ், திமுக பிரமுகர்கள் ஏ.கண்ணன், பூமார்க்கெட் சாமி தங்கம், தாயுள்ளம் சமூக அமைப்பு விஜயகுமார், ரமேஷ், கவுன்சிலர் குமாரசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பீட்டர் அமைதி நிறுவனம் சார்பில் அதன் துணைத்தலைவர் இ.டெய்சி பிரேமலதா தலைமையில் திருப்பூர், பொங்கலூர், ஈரோடு, சத்தியமங்கலம், அரசூர், சூலூர் ஆகிய இடங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி சிறார்களுக்கு இனிப்புகள், பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.



