fbpx
Homeபிற செய்திகள்சேலம் மாவட்டத்தில் 75 மையங்களில் குப்பையை தரம் பிரித்து நுண் உயிரி உரம் தயாரிப்பு- செய்தியாளர்...

சேலம் மாவட்டத்தில் 75 மையங்களில் குப்பையை தரம் பிரித்து நுண் உயிரி உரம் தயாரிப்பு- செய்தியாளர் பயணத்தில் ஆட்சியர் கார்மேகம் தகவல்

சேலம் மாவட்டத்தில், சேகரிக்கப்படும் குப்பையை தரம் பிரித்து நுண் உயிரி உரம் தயாரிக்கும் மையங்கள் 75 உள் ளன என மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில், மாநக ராட்சியின் சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கு பெறும் தூய்மை சுற்றுலா நிகழ்ச்சி குறித்த செய்தியாளர் பயணம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தலை மையில் நடந்தது.

அப்போது, ஆட்சியர் செ.கார்மேகம் பேசியதாவது:
நமது தூய்மையான சுற்றுச் சூழலை அரசு அலுவலர்களோ, மக்கள் பிரதிநிதிகள் மட்டுமோ உருவாக்கிட முடியாது என்பதை கருத்தில் கொண்டு, குடிமக்களும் தூய்மையான சுற்றுச்சூழலின் அவசியத்தை தெரிந்து கொண்டு தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதே இத்தி ட்டத்தின் நோக்கமாகும்.

சேலம் மாவட்டத்தில், 1 மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகள் மற்றும் 20 ஊராட்சி ஒன்றியங்கள் அமைந் துள்ளன. இங்கு நாள்தோறும் வெளியேற்றப்படும் குப்பை முறை யாக மக்கும் குப்பை, மக்காத குப்பையாக தரம் பிரித்து நுண் உயிரி உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மாந கராட்சியில் 28 நுண் உயிரி உரம் தயாரிக்கும் மையங்களும், நகராட்சிகளில் 3 நுண் உயிரி உரம் தயாரிக்கும் மையங்களும், பேரூராட்சிகளில் 24 நுண் உயிரி உரம் தயாரிக்கும் மையங்களும், ஊராட்சி ஒன்றியங்களில் 20 நுண் உயிரி உரம் தயாரிக்கும் மையங்களும் என மொத்தம் 75 நுண் உயிரி உரம் தயாரிக்கும் மையங்கள் செயல்படுகின்றன.

மாநகராட்சியில் தினமும்
550 மெ.டன் குப்பை சேகரம்
குறிப்பாக, சேலம் மாநகராட் சியில் மட்டும் நாளொன்றுக்கு 550 மெட்ரிக் டன் குப்பை சேகரமாகிறது. இந்த குப்பை அதிகளவில் சேர்ந்து சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில் இவற்றை பயன்படும் பொருளாக மாற்றிட வேண்டியது அவ சியமாகிறது.

இப்பணியை சிறப்பாக மேற்கொள்ளும் வகை யில் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலிருந்து குப்பையை, தூய்மை பணியாளர்களிடம் வழங்கும்போதே மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தனித் தனியாக பிரித்து வழங்கிட அறிவுறுத்தப்படுகிறது.

இத்தகைய குப்பை பெறும் தூய்மை பணியாளர்கள், நுண் உயிரி தயாரிக்கும் மையங்களில் மக்கும் குப்பை இயந்திரங்களில் சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி அதற்கான தொட்டிகளில் 15 நாட்கள் வைத்து, அதனை பயன்தரும் வகையில் நுண் உயிரி உரமாக தயாரிக்கப்படுகிறது. இதனை விவசாயிகள் விரும்பி வாங்கிச்சென்று பயன்படுத்து வதன் மூலம் மீண்டும் மண்ணிற்கு பயனாக அமைகிறது.

நேரடி செயல் விளக்கம்
வருக்கால தலைமுறைகளான பள்ளி மாணவ, மாணவிகள் இது போன்று சுற்றுச்சூழல் தொடர்பான முக்கிய நிகழ் வுகளை பாடப் புத்தகங் களில் படிப்பதைவிட நேரடியாக சென்று பார்த்து தெரிந்து கொள் வதன் மூலம் தங்கள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் குப்பை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த புரிதல் மாணவர்களுக்கு கிடைக்கச் செய்திடும் வகையில், மாணவ, மாணவிகளை 4 குழுக்களாக பிரித்து, சேலம் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று, வீடுகளில் குப்பை சேகரிக்கும் முறைகள் தொடங்கி நுண் உயிரி உரமாக மாற்றுதல் வரை நேர டியாக காண்பிக்கப்பட்டது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித்தார்.
இப்பயணத்தின் போது மேயர் ஆ.இராமச்சந்திரன் தெரிவித்த தாவது:
முதல்வர் வழிகாட்டுதலின் படி, சேலம் மாநகராட்சியில், நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்றைய தினம் பள்ளி மாணவ, மா ணவிகளுக்கான தூய்மை சுற்று லா நிகழ்ச்சி ஏற்பாடு செய் யப் பட்டுள்ளது.

மறுசுழற்சியில்
இயற்கை உரம்
சேலம் மாநகராட்சி 2,38,624 வீடுகளும், 9.60 இலட்சம் மக்கள் தொகையையும் கொண்டதாக விளங்குகிறது. தினசரி திடக் கழிவு 550 மெட்ரிக் டன் உற்பத் தியாகிறது.

இதில் மக்கும் கழிவுகள் 319 டன் ஆகும். வீடுகளிலிருந்து பெறப்படும் குப்பை, சேலம் மாநகராட்சியில் அமைந்துள்ள 28 நுண் உயிரி உரங்கள் தயாரிக்கும் மையங்கள் மூலம் பயன்படுத்த கூடிய வகையில் இயற்கை உரங்களாக மறுசுழற்சி செய்யப்படுகிறது என்றார்.

முன்னதாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நகரங்க ளின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதி மொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

செய்தியாளர் பயண நிகழ்ச் சியில், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள், துணை மேயர் மதி.மா.சாரதாதேவி, சூரமங்கலம் மண்டலக் குழுத் தலைவர் எஸ்.டி.கலையமுதன், மாமன்ற உறுப்பினர்கள் சத்திய மூர்த்தி, மதி.சங்கீதா நீதிவர்மன், மாநகராட்சி ஆணையாளர் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோர் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img