fbpx
Homeபிற செய்திகள்சேலத்தில் அமமுக செயல்வீரர்கள் கூட்டம்

சேலத்தில் அமமுக செயல்வீரர்கள் கூட்டம்

சேலம் மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் நெய்க்காரப்பட்டி பொண்ணா கவுண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கழக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆலோசனை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில், மண்டல பொறுப்பாளரும் மத்திய மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்ட உறுப்பினருமான எஸ்.கே.செல்வம், கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சண்முகம், மேற்கு மாவட்ட கழக செயலாளர் சங்கர், வடக்கு மாவட்ட கழக செயலாளர் மாதேஸ்வரன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பகுதி கழக செயலாளர்கள் சார்பு அணி நிர்வாகிகள் வட்டக் கழக கிளைக் கழக செயலாளர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img