Homeபிற செய்திகள்சென்னையில் விபத்துகள் அதிகமுள்ள பகுதி ‘கிண்டி’- ‘அக்கோ’ அறிக்கையில் தகவல்

சென்னையில் விபத்துகள் அதிகமுள்ள பகுதி ‘கிண்டி’- ‘அக்கோ’ அறிக்கையில் தகவல்

சென்னைதான் விலங்குகள் மூலம் விபத்துகளால் அதிகம் பாதிக்கப்படுகிறது. கிண்டி, அம்பத்தூர், பூந்தமல்லி ஆகியவை சாலை விபத்துக்கான வாய்ப்புள்ள பகுதி என ‘அக்கோ’ தகவல் தெரிவிக்கிறது

இந்தியாவின் முன்னணி முதல்-தொழில்நுட்ப காப்பீட்டு வழங்குனரான ‘அக்கோ’, அதன் இரு-வருட பதிப்பான ‘அக்கோ விபத்து அறிக்கை 2022’-ல் இதை தெரிவித்துள்ளது.

பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட முக்கிய பெருந கரங்களில் காணப்படும் விபத்து நிலவரங்களை விவரிக்கும் இந்த அறிக்கை, சென்னையில் விபத்து விகிதத்தை 18.6% பதிவு செய்துள்ளதாக தெரியப்படுத்தியுள்ளது.

தொழிற்சாலை பகுதிகளான கிண்டியில் 19% விபத்துகள் பதிவாகியுள்ளன. அம்பத்தூரில் 14% விபத்துகளும் பூந்தமல் லியில் 13% விபத்துகளும் பதிவாகியுள்ளது.

நகரத்தில் ஏற்படும் விபத்துகளுக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்கள் ‘மற்ற ஓட்டுநர்கள்’. அதைத் தொடர்ந்து விலங்குகள் சாலையை கடப்பது, அவசரமாக வாகனம் ஓட்டுதல், பள்ளங்கள் மற்றும் மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் ஆகியவை.

மற்றுமொரு அதிர்ச்சியூட்டும் தகவலாக சாலை விபத்துகளுக்கு விலங்குகளின் அச்சுறுத்தல் முக்கிய காரணமாக கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில், இது அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது- 3% மேல் விபத்துகள், நாய்கள், மாடுகள் மற்றும் வியக்கத்தக்க வகையில் எலிகளும் விபத்துகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.

‘அக்கோ’வின் மோட்டார் அண்டர் ரைட்டிங் – மூத்த இயக்குனர், அனிமேஷ் தாஸ் கூறியதாவது: சாலை விபத்துகளும் அதனால் ஏற்படும் மரணங்களும் தடுக்கக்கூடியவை.

தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டால் கணிக்கக்கூடியவை.
இந்த அறிக்கை பாலிசி உருவாக்குனர்களுக்கும் நிர்வாகத்திற்கும் உதவியாக இருக்கும். இந்தியாவில் விபத்துகள் அதிகம் உள்ள இடங்களில் அவர்கள் நடவடிக்கை எடுக்க முடியும்.

ஹைதராபாத்: நிசாம்பேட்டை தவிர ஹைதராபாத்தின் மொத்த விபத்து விகிதம் 18.5 %. பெங்களூரு: 16% என்ற குறைவான விபத்து விகிதம் பதிவாகி பெங்களூரு சிறந்து விளங்குகிறது.

விபத்துகள், கடுமையான நெரிசல்களை எதிர் கொள்ளும் பன்னர்கட்டாவிலிருந்து ஹூடி வரையிலான 50 கிமீ வழித்தடத்தில் நடந்துள்ளன. டெல்லி: நொய்டாவின் செக்டார் 12 டெல்லி என்சிஆர் பகுதி 9% விபத்துகளை பதிவு செய்துள்ளது.

மொத்தத்தில், டெல்லி 20.3% விபத்து விகிதத்தை பதிவு செய்துள்ளது.
மும்பை: மும்பை 18.2% விபத்து விகிதத்தைப் பதிவு செய்தது.

படிக்க வேண்டும்

spot_img