Homeபிற செய்திகள்சூலூரில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கேரள அமைச்சர் பங்கேற்றார்

சூலூரில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கேரள அமைச்சர் பங்கேற்றார்

கேரள மக்களின் முக்கிய திரு விழாவான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் துவங்கி விட்ட நிலையில் சூலூர் மலையாள சமாஜம் மற்றும் அரிமா சங்கம் சார்பில் நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

சூலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கேரளா மாநிலத்தின் மின்சாரத் துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வந்திருந்தவர்களை மார்கிரெட் ஜான்சன் வர வேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஓணத்தை வரவேற்கும் வண்ணம் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கோலங்கள், கேரள பாரம்பரிய நடனங்கள்,மோகினி ஆட்டம் போன்றவைகள் இடம்பெற்றன.

இந்த விழாவில் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில இணைச் செயலாளர் மகேந்திரன், கேரள மின்சாரத்துறை சேர்மன் முருகதாஸ், உழவர் உழைப்பாளி கட்சித் தலைவர் செல்லமுத்து, ராமநாதபுரம் மறைமாவட்ட ஆயர் பவுல்ஆல்பர்ட், பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் செல்வராஜ் ,சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், ஒன்றியக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

விழா ஏற்பாடுகளை அமைப்புக ளுடன் ஏ.கே.ஜான்சன் சிறப்பாக செய்திருந்தார். 500-க்கும் மேற்பட்ட மகளிர் குழந்தைகள் அனைவருக்கும் கேரள வகை மதிய உணவு வழங் கப்பட்டது

படிக்க வேண்டும்

spot_img