fbpx
Homeபிற செய்திகள்சுவி எக்ஸ்போர்ட்ஸ் சார்பில் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு 40 கட்டில்கள் வழங்கப்பட்டன

சுவி எக்ஸ்போர்ட்ஸ் சார்பில் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு 40 கட்டில்கள் வழங்கப்பட்டன

திருப்பூர் சுவி எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் ஜியோ செல்வம் ஏற்பாட்டில், திருப்பூர் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெறும் பயனாளிகளின் பயன்பாட்டிற்காக உயர்தரமான மெத்தைகளுடன் கூடிய 40 தரமான கட்டில்களை, திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் திருப்பூர் மத்திய மாவட்ட கழக செயலாளருமான க.செல்வராஜ் திறந்துவைத்து, மருத்துவக்கல்லூரி முதல்வர் முருகேசன், ஆர்.எம்.ஓ. பாரதி ஆகியோரிடம் ஒப்படைத்தார்.

நிகழ்வில் திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் டிகேடி மு.நாகராசன், திருப்பூர் வடக்கு மாநகர பொறுப்பாளர் ந.தினேஷ்குமார், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் டிஜிட்டல் சேகர், செந்தூர் முத்து, ராமசாமி, தெற்கு மாநகர பொறுப்புக்குழு உறுப்பினர் ராமு, வேலம்பாளையம் பகுதிக் கழக செயலாளர் கொ.ராமதாஸ், செ.திலகராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் உமாமகேஸ்வரி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நந்தகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், கருவம்பாளையம் பகுதி அவைத்தலைவர் தம்பி குமாரசாமி, வட்டக் கழக செயலாளர் தளபதி சேகர், வடக்கு மாநகர விவசாயத் தொழிலாளரணி அமைப்பாளர் அசோக், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img