Homeபிற செய்திகள்சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருப்பூர் விஜிபி கார்டனில் மரக்கன்றுகள் நடும் விழா

சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருப்பூர் விஜிபி கார்டனில் மரக்கன்றுகள் நடும் விழா

திருப்பூர் ஸ்ரீ மகாசக்தி அறக்கட்டளையின் சார்பில் பூமலூர் விஜிபி கார்டனில் 1000 மரக்கன்றுகள் நடும் திட்டம் ஸ்ரீ மகாசக்தி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் குளோபல் மு.பூபதி தலைமையில் தோடங்கப்பட்டது.

முதல் கட்டமாக 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் வெற்றிசெல்வன், மங்கலம் காவல் ஆய்வாளர் பாலசுந்தரம். கதிரவன் பள்ளி குழுமங்களின் தாளாளர் நாராயணமூர்த்தி கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிர்வாக குழு உறுப்பினர்கள் ஜம்புலிங்கம், வெள்ளைச்சாமி, முருகேசன், .அவிநாசி. செந்தில்குமார், மேஜிக் கலைஞர் பிரதீப். கண்ணன் அவிநாசி, மலர்மோகன், விஜிபி குடியிருப்போர் நலசங்க தலைவர் சிவசங்கர், செயலாளர் தரணிதரன், பொருளாளர் செல்வி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறக்கட்டளை நிறுவனத்தலைவர் குளோபல் மு.பூபதி நன்றி தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img