வேலூரில் 73 வது குடியரசு தின விழா நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து பல துறைகளில் சிறந்த பணி செய்தவர்களுக்கு சான்று வழங்கினார்.
வேலூர் மாநகராட்சி சுகாதாரத் துறையில் கொரோனா காலகட்டத்தில் சிறப்பான முறையில் பணியாற்றியமைக்கு வேலூர் மாநகராட்சி இரண்டாவது மண்டல சுகாதார அலு வலர் சிவக்குமாருக்கு சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா, வேலூர் மாநகராட்சி ஆணையாளர் அசோக்குமார், மாநகர நல அலுவலர் டாக்டர் மணிவண்ணன் உடனிருந்தனர்.



