சிமாட்ஸ் ஸ்கூல் ஆப் என்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் வரிசையில் ‘உன்னத பாரத் அபியான்’ திட்டத்தில் மாணவர்கள் தன்னார்வலர்கள் இக்கல்லூரிக்கு அருகில் உள்ள கிளச்சேரி கிராமத்திற்கு சென்றனர்.
அங்கு அவர்கள் கிளச்சேரி கிராம பஞ்சாயத்தில் சம்பந்தப்பட்ட துறை பிரதிநிதிகளை சந்தித்து, தங்கள் கல்லூரி வெல்டிங், மெஷின் ஆபரேஷன், எலக்ட்ரிக்கல் ஒர்க், கம்ப்யூட்டர் புரோகிராமிங், பிளம்பிங், ஆட்டோமொபைல் போன்ற துறைகளில் திறன் சார்ந்த பயிற்சித் திட்டங்களை வழங்குவது குறித்து தெரிவித்தனர். இந்த பயிற்சியில் சேர்ந்து பலன்பெற விரும்பியவர்களின் தகவல்களை சேகரித்து கல்லூரி நிர்வாகத்திடம் வழங்கினர்.