fbpx
Homeபிற செய்திகள்சிப்பாய் புரட்சி நினைவு தினம்

சிப்பாய் புரட்சி நினைவு தினம்

இந்திய நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட வேலூர் சிப்பாய் புரட்சியின் நினைவு தினம் இன்று வேலூரில் அனுசரிக்கப்பட்டது.

இதனையொட்டி இன்று காலை வேலூர் கோட்டை எதிரே உள்ள சிப்பாய் புரட்சி நினைவு தூணில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் , மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் செல்வகுமார் ,வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள்,மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1806 ஆம் ஆண்டு மதராஸ் படைக்கு தளபதியாக இருந்த சர் ஜான் கிரேடேக் என்பவர் வேலூர் கோட்டையில் இருந்த இந்திய சிப்பாய் களுக்கு பல்வேறு அடக்கு முறைகளை கையாண்டார்.

அதில் குறிப்பாக இந்திய சிப்பாய்கள் காதில் கடுக்கன் அணியக்கூடாது ,சமய சின்னங்களை உடலில் அணிய கூடாது,தாடியை அகற்றிவிட்டு மீசையை வைத்துக்கொள்ள வேண்டும், பசுந்தோலால் செய்யப்பட்ட தொப்பிகளை அணிய வேண்டும், மதக்குறிகளை நெற்றியில் இடக் கூடாது,

துப்பாக்கிகளை பன்றி யின் கொழுப்பின் மூலம் சுத்தம் செய்ய வேண்டும் ,உள்ளிட்ட பல்வேறு அடக்கு முறைகளை கொண்டு வந்தார்.இதனால் இந்திய சிப்பாய்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டனர்,

இதன் காரணமாக ஆங்கிலேயர் ஆட்சியை வீழ்த்த வேண்டும் என திட்டமிட்டு வேலூர் கோட்டையில் 1806ம் ஆண்டு ஜூலை 10 ஆம் நாள் நள்ளிரவில் ஆங்கிலேய வீரர்களை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

அப்போது இருதரப்பினருக்கும் ஏற்பட்ட போரில் 900 க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர் .

பின்னர் இந்த கிளர்ச்சி நாடு முழுவதும் பரவியது ,வேலூர் கோட்டையில் ஏற்பட்ட, இந்த முதல் சிப்பாய் கலகம் எனப்படும் புரட்சியே, நம் நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட முதல் சம்பவம் என வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.

இச்சம்பவம் நினைவாக வேலூர் கோட்டை எதிரே 1998 ஆம் ஆண்டு தமிழ க அரசால் நினைவு தூண் அமைக்கப்பட்டு ஆண்டு தோறும் ஜூலை 10ஆம் நாள் அஞ்சலி செலுத் தப்பட்டு வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img