fbpx
Homeபிற செய்திகள்சார்ட்டர்டு அக்கவுண்டன்சி பயிற்சி திட்டம்: வெராண்டா எக்ஸெல் அறிமுகம்

சார்ட்டர்டு அக்கவுண்டன்சி பயிற்சி திட்டம்: வெராண்டா எக்ஸெல் அறிமுகம்

கல்பாத்தி ஏஜிஎஸ் குழுமத்திற்கு சொந்தமான வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ், வெரா ண்டா எக்ஸெல் என்ற பயிற்சி திட்டம் தொடங்க ப்படுகிறது.

சார்ட்டர்டு அக்கவுண்டன்சி-க்கான இந்தியாவின் மிக விரிவான, முழுமையான பயிற்சி திட்டங்களுள் ஒன்றாக இது திகழ்கிறது.

தகுதி வாய்ந்த சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்-ஆக ஒரு நபர் ஆவதற்கு உயர்வான தகுதி நிலையை நிர்ணயிப்பதற்கு சிஏ-வுக்கான தேர்வு களை இந்திய பட்டய கணக் காளர் சங்கம் (ICAI) வடிவமைத்திருக்கிறது.

தேர்ச்சிபெற கடினமான இந்த சிஏ தேர்வுகளுக்கு தயாராக மாணவர்களுக்கு உதவ வெராண்டா 360 (விரிவான ஆன்லைன் கோச்சிங்) மாடலை வெராண்டா எக்ஸெல் வழங்கும்.

இம்மாதத்தில் அனுசரிக் கப்படும் சார்ட்டர்டு அக்கவுண்டன்சி தினத்தைக் கொண்டாடும் விதமாக, ஒரு குறுகியகால சிறப்பு சலுகையாக பவுண்டேஷன் செயல் திட்டத்தை ரூ.4999 மற்றும் இண்டர்மீடியட் மற்றும் ஃபைனலின் ஒவ்வொரு குரூப்பையும் முறையே ரூ.5999 மற்றும் ரூ.6999 என்ற சலுகை கட்டணத்தில் வெராண்டா எக்ஸெல் வழங்குகிறது.

அதிக தகவலைப் பெற மாணவர்கள் www.verandaexcel.com என்ற வலைதளத்தில் லாக்-ஆன் செய்யலாம்.

வெராண்டா லேர்னிங் சொல்யூஷனின் தலைமைச் செயல் அலுவலர் சுரேஷ் கல்பாத்தி கூறியதாவது:
உயர்தரமுள்ள சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்கள் இருப்பதை உறுதி செய்ய தேர்வுகளுக்கு மிக கடுமையான தரநிலைகளை ICAI நிர்ணயித்திருக்கிறது.

இதற்கான பாடத்திட்டம் மிகப்பெரியது. சிஏ-வாக ஆக வேண்டும் என்ற தீராத ஆவலுள்ள மாணவர்களது கனவை பூர்த்தி செய்வதற்கு உதவும் எமது முயற்சியே வெராண்டா எக்ஸெல் என்ற இத்திட்டம்.

வெராண்டா எக்ஸெல் வழியாக சிஏ தேர்வுக்கு தயார் செய்வதற்கு வெராண்டாவின் 360 டிகிரி ஒருங்கிணைக்கப்பட்ட பயிற்சியளிப்பு அணுகு முறையை வழங்க நாங்கள் விழைகிறோம். இதற்காக சிறந்த பயிற்றுநர்களை ஆசிரியர்களாக தேர்வு செய்திருக்கிறோம் என்றார்.

திறன் உயர்த்தல் செயல் திட்டங்கள் மட்டுமன்றி மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம், வங்கிப் பணியாளர் தேர்வு / ஸ்டாஃப் செலக்‌ஷன் / RRB, IAS மற்றும் சிஏ தொடர்புடைய தேர்வுகள் உட்பட இந்தியாவில் போட்டி தேர்வுகளுக்கு சிறப்பாக தயார் செய்வதற்கான பயிற்சியளிப்பு திட்டங்களை வழங்க ஒரு செயல் தளத்தில் வெராண் டா கட்டமைப்பு செய்து வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img