Homeபிற செய்திகள்சம்ஹிதா அகாடமியில் சகோதயா கூட்டமைப்பு பள்ளிகளுக்கான கைவினைப் போட்டிகள்

சம்ஹிதா அகாடமியில் சகோதயா கூட்டமைப்பு பள்ளிகளுக்கான கைவினைப் போட்டிகள்

43-வது கோயம்புத்தூர் சகோதயா கூட்டமைப்பு பள்ளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் இணைப்பாட திட்ட செயல்பாடுகளின் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கைவினைப் பாடுகளுக்கான ஆண்கள் பிரிவு போட்டி கோயம்புத்தூர் தி சம்ஹிதா அகாடமி பள்ளியில் கடந்த 27-ம் தேதி நடந்தது.
சிறப்பு விருந்தினர் ஜூனியர்ஸ் கிட்ஸ் இன்டர்நேஷனல் பிளே ஸ்கூல் நிறுவனர் கே.தங்கம் போட்டியை தொடங்கி வைத்தார்.

போட்டியில் 39 பள்ளிகளை சார்ந்த 207 மாணவர் கள், ஆசிரியர்களுடன் வந்து கலந்து கொண்டனர். மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நான்கு முதல் ஆறாம் வகுப்பு மாணவர்கள் முதல் பிரிவினராகவும், 7 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் இரண்டாம் பிரிவினராகவும், 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் மூன்றாம் பிரிவினராகவும் பிரிக்கப்பட்டு போட் டிகள் நடத்தப்பட்டன.

முதல் பிரிவில், சி.எஸ்.அகாடமி பள்ளி ஜி.தேவ் முதல் பரிசையும், ஜிஆர்டி பப்ளிக் பள்ளி என்.வி.யஷ்வந்த் 2-வது, சி.எஸ்.அகாடமி பள்ளி ஹெச்.ஸ்ரேயஸ் 3-வது பரிசையும் பெற்றனர்.

இரண்டாம் பிரிவில், தி சம்ஹிதா அகாடமி பள்ளி எம்.சஞ்சீவ் முதல் பரிசையும், டெல்லி பப்ளிக் பள்ளி எஸ்.வி.இசாந்த் 2-வது, எஸ்.எஸ்.வி.எம். எக் ஸலன்ஸ் பள்ளி எஸ்.சந்தோஷ் 3-வது பரிசையும் பெற்றனர்.

மூன்றாம் பிரிவில், நேஷனல் மாடல் பள்ளி எஸ்.அகிலேஷ், டெல்லி பப்ளிக் பள்ளி சி.எஸ்.கிருத்திக், சந்திராகாந்த பப்ளிக் பள்ளி ஹரிஹர யுவராஜ் ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.

முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற் றவர்களுக்கு கோப்பையும், சான்றிதழும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டி ஏற்பாடுகளை தி சம்ஹிதா அகாடமி பள்ளி நிர்வாகம் செய்திருந்தது.

படிக்க வேண்டும்

spot_img