fbpx
Homeபிற செய்திகள்சன்பீஸ்ட் உருளைக்கிழங்கு பிஸ்கட், இந்தியாவில் அறிமுகம்

சன்பீஸ்ட் உருளைக்கிழங்கு பிஸ்கட், இந்தியாவில் அறிமுகம்

இந்த உருளைக்கிழங்கு பிஸ்கட், வேபர் போன்று லேசானது, மொறு மொறுப்பானது மற்றும் மசாலா சுவையூட்டப்பட்டது, அதே சமயம் கிராக்கர் பிஸ்கட்டை போன்று சமைக்கப்பட்டது.

ஸ்கட் மற்றும் கேக் வகைகளில் இந்தியாவின் மிகவும் விருப்பமான பிராண்ட்களில் ஒன்றான ஐடிசி நிறுவனத்தின் சன் பீஸ்ட், புதிய சன் பீஸ்ட் ஆல்-ரவுண்டர் மூலம் சந்தையில் மேலும் ஒரு புதிய பிஸ்கட்டை அறிமுகம் செய்கிறது. அது புதிய உருளைக்கிழங்கு பிஸ்கட் ஆகும்.

இது, மசாலா தூவப்பட்ட, மொறுமொறுப்பான மற்றும் இந்தியாவில் இதுவரை தயாரிக்கப்பட்டதில் மிக மெல்லிய பிஸ்கட்களில் ஒன்றாகும். ரூ.6000 கோடி வணிகத்தை கொண்ட கிராக்கர் பிஸ்கட் பிரிவில் புதிய வரவாகும்.

சன் பீஸ்ட் ஆல்ரவுண்டரின் மெல்லிய உருளைக்கிழங்கு பிஸ்கட் அனைத்து நேரங்களிலும் சாப்பிட ஏற்றதாகும். இதன் மீது தூவப்பட்ட மசாலா நல்ல நறுமணத்தையும், உப்பு, மிளகு கலந்த கார சுவையையும் ஒவ்வொரு கடிக்கும் நீண்ட நேரத்திற்கு நுகர்வோருக்கு தரும்.

புதிய அறிமுகம் குறித்து, அலி ஹாரிஸ் ஷேர் (சீப் ஆபரேட்டிங் ஆபீசர், பிஸ்கட்ஸ் மற்றும் கேக்ஸ் கிளஸ்டர், புட்ஸ் டிவிசன்) கூறுகையில், ‘சன் பீஸ்ட் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் பிஸ்கட் மற்றும் குறிப்பாக கிராக்கர் பிரிவில் நுகர்வோர் அனுபவத்தை மீண்டும் வரையறுக்க விரும்புகிறோம்.

மேலும், பிஸ்கட் மற்றும் கேக் வகைகளில் புதுமையின் சாம்பியனாக சன் பீஸ்ட்டை வலுப்படுத்தும் வெற்றி வரலாற்றை வடிவமைக்கவும் விரும்புகிறோம்’ என்றார்.

சன் பீஸ்டின் சமீபத்திய வெளியீடு 32.9 கிராம் மற்றும் 75 கிராம் எஸ்கேயு பேக்குகளில் முறையே ரூ.10 மற்றும் ரூ.20 விலையில் கிடைக்கும். சன் பீஸ்ட் ஆல் ரவுண்டர் முதலில் தென் இந்தியா, மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநில சந்தைகளில் கிடைக்கும்.

படிக்க வேண்டும்

spot_img