fbpx
Homeபிற செய்திகள்கோவை மேற்கு மண்டல பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மேற்கு மண்டல பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்புப் பணிகளில், ஈடுபடும் முன்களப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.14 வெங்கிட்டாபுரம் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் முன்களப்பணியாளர்கள் மேற் கொண்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் ஆணையாளர்.

முன்களப் பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று சளி, காய்ச்சல், இருமல் போன்ற பரி சோதனைகளை கண்டறிந்து, பரிசோதனையின்விபரங்களை கோவிட் -19 கள ஆய்வுப் பதிவேடுகளில் பதிவு செய்ததை ஆய்வு செய்தார்.

கொரோனா தொற்று ஏற் பட்டது கண்டறிப்பட்டால் அவர் களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உடனடியாக சிகிச்சை அளித்து காப்பற்றப்படுகிறது. இத்தகைய பணிகளை நீங்கள் இன்னும் மிகச்சிறப்பாக செய்திட வேண்டும்.

களப்பணி மேற்கொள் ளும்போது முகக்கவசம் அணிந்தும், கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திட வேண்டும். கொசு வினால் ஏற்படும் நோய்களை தடுப்பதற்காக பொதுமக்களிடம் வீடுகளில் உள்ள உபயோகமற்ற பொருட்கள், பயனற்ற பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.

தண்ணீர் தொட்டிகளை கொசுக்கள் புகாவண்ணம் மூடி வைக்க வேண்டும் என்பதை பொதுமக்களிடம் முன்களப்பணி யாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆணையாளர் கேட்டுக் கொண்டார்.

வார்டு எண்.22, இராமலிங்கம் காலனி, பாரதி பூங்கா சாலை-2ல் உள்ள மீனாட்சி மகப்பேறு மைய நகர்ப்புற ஆரம்ப சுகா தார நிலையத்தில் ஆய்வு மேற் கொண்டார் ஆணையாளர்.

கர்ப்பிணிகளுக்கு பிரசவத்திற்கு முன்பு, பின்பு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், தாய், சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், தாய் சேய் நல பாதுகாப்பு அட்டையில் பதிவு செய்து, பராமரிப்பது குறித்த பதிவேடுகளையும், புற நோயா ளிகளின் பதிவேடு மற்றும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் கர்ப்பி ணிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது குறித்தும் கேட்டறிந்தார்.

அங்குள்ள பராமரிப்பு பதிவேடுகளையும், கணினி பதிவேற்றம், செய்யும் மையத்தில் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

அந்த மையத்தில் ரூ.37.5 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் கூடுதல் கட்டிடத்தின் பணிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார் ஆணையாளர்.

ஆய்வின்போது, உதவி நகர்நல அலுவலர் மரு.வசந்த் திவாகர், மேற்கு மண்டல உதவி ஆணையாளர் சிவசுப்பிரமணியன், செயற்பொறியாளர் (மேற்கு மண்டலம்), பார்வதி, உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img