fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட கூடைப்பந்து கழக புதிய நிர்வாகிகள் தேர்வு

கோவை மாவட்ட கூடைப்பந்து கழக புதிய நிர்வாகிகள் தேர்வு

கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து கழகத்திற்கு 2021-2025 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர், ஜி. செல்வராஜ் மீண்டும் புதிய தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டார்.

துணை தலைவர்களாக சி.என்.அசோக், சி.ஆனந்த், டி.பழனி சாமி, நவரத்ன குமார் பாப்னா, செயலாளராக எஸ்.பாலாஜி, இணைச் செயலாளர்களாக என்.ராமலிங்கம், ராம கிருஷ்ணன், திபாலா, பொருளாளராக எஸ்.பத்ம நாபன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவராக பொறுப் பேற்ற ஜி.செல்வராஜ் கூறியதாவது:
பதவி ஏற்ற நிர்வாகிகள் அனைவரும் கூடைப் பந்தாட்ட வீரர்கள் மற்றும் புதிய முகங்கள்.

தமிழகத்தில் கோவை மாவ ட்டத்தில் தான் அதிகமாக போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கோவை மாணவ, மாணவிகள் மாவட்ட, மாநில, தென்னிந்தியா மற்றும் தேசிய அளவில் நடைபெறும், பல போட் டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

இவர்களை போல மேலும் பல ஆர்வமுள்ள மாணவ மாணவர்களை ஊக்கமூட்டும் விதமாக அவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்க உள்ளோம்.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தாக்கத்தால் இந்த போட்டிகள் நடை பெறவில்லை.

அடுத்த 2022-ம்ஆண்டு மே மாதம் 55-வது தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கு பெறும் போட்டி நடத்த திட்டமிட்டுள்ளோம்.

கோவையில் சர்வதேச அளவில் கூடைப்பந்து உள் விளையாட்டு அரங்கம் ஏற்படுத்த தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும்.

கோவையில் மினி, ஜூனியர், சீனியர் மாணவ, மாணவியர் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் மாவட்ட அணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

மாவட்டத்தின் கிராமப் புற பகுதிகளான பொள்ளாச்சி, அன் னூர், தொண்டாமுத்தூர் போன்ற பகுதிகளில் இவ்விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கூறினார்.
பேட்டியின் போது புதிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img