கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் தொழில் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியை பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பாக தொழில் நிறுவனங்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கவிதா, பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் கார்த்திகைவாசன் மற்றும் பலர் உள்ளனர்.



