fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்டத்தில் ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தில் மருத்துவமனைகளுக்கு ரூ. 20.03 லட்சம் வழங்கல் அமைச்சர் செந்தில்பாலாஜி...

கோவை மாவட்டத்தில் ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தில் மருத்துவமனைகளுக்கு ரூ. 20.03 லட்சம் வழங்கல் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

கோவை மாவட்டத்தில் மட்டும், ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் மூலம் 198 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது வரையில் சிகிச்சை தொ¬ கயாக ரூ.20.03 இலட்சம் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் மோகன் குமார் (வயது 21). கடந்த டிச.22-ம் தேதி பொள்ளாச்சி பகுதியில் வாகன விபத்தின்போது தலை மற்றும் உடலின் பல பாகங்களில் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக கோவை கங்கா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

அவரை கங்கா மருத்துவ மனை நிர்வாகத்தினர், முதல மைச்சரின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் உடனடியாக அனுமதித்து அவருக்கு தே¬ வயான அனைத்துவித அவசர சிகிச்சைகளை மேற்கொண்டனர். தற்போது அவர் கோவை கங்கா மருத்துவமனையில் நலமாக உள்ளார்.

இந்நிலையில், முதலமைச்ச ரின் உத்தரவிற்கிணங்க, மின்சாரம் மதுவிலக்கு மற் றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் மோகன்குமாரை மருத்துவமனையில் சந்தித்து பழங்கள் வழங்கி, அவரிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், கங்கா மருத்துவமனை நிறுவனர்கள் டாக்டர் ராஜசேகரன், டாக்டர் ராஜசபாபதி ஆகியோர் இருந்தனர்.

உயிரிழப்புகளை தடுத்தல்
பின்னர் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி செய்தியாளர் களிடம் தெரிவித்ததாவது:
தமிழக அரசு சாலைப் பாதுகாப்பு, சாலை விபத்துகளை குறைத்தல், சாலை விபத்தில் உயிரிழப்புகளை தடுத்தல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைத்திடும் நோக்கில், தமிழக அரசால் வகுக்கப்பட்ட உன்னத திட்டமே ‘இன்னுயிர் காப்போம்’ திட்டம்.

இத்திட்டத்தின் முக்கிய அங்கமாக, சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை, தமிழக அரசே மேற்கொள்ளும் வகையில் ‘இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48’-திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

609 மருத்துவமனைகள்
இத்திட்டத்திற்கென அங்கீகரிக்கப்பட்ட 215 அரசு மருத்துவமனைகள் மற்றும் 394 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டு, மருத்துவச் சிகிச்சைகள் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மாநில எல்லைக்குள்
இத்திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற எதிர்பாராத வகையில் ஒருவர் காலை 8 மணி முதல் மாலை 6 மணிக்குள் விபத்திற்குள்ளாகும்போது 4 மணி நேரத்திற்குள்ளாகவும், மாலை 6 மணி முதல் காலை 8 மணிக்கு விபத்திற்குள்ளாகும் போது 12 மணி நேரத்திற்குள்ளாகவும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை வாயிலாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

தமிழ்நாடு எல்லைக்குள் விபத்திற்குள் ளாகும், எந்த மாநிலங்களை சேர்ந்தவராக இருந்தாலும், இத்திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறலாம்.

இத்திட்டத்தின் மூலம், கடந்த டிச.22-ம் தேதி பொள்ளாச்சி – பழனி சாலை ஊஞ்சவேலம்பட்டி மில் கேட் பகுதியில் வாகன விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக கோவை கங்கா மருத்துவம¬ னயில் உயிருக்குப் போராடிய நிலையில் அனுமதிக்கப்பட்ட மோகன் குமார் என்பவரை முதலமைச்சரின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் ஏறக்குறைய 13 மணி நேரம் 15-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை செய்து அவருடைய உயிரை காப்பாற்றியுள்ளனர். முதல்வருக்கு அவருடைய குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

முதல்வர் சார்பாக, சகோதரர் மோகன்குமார் விரைந்து குண மடையவும், மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவும் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டேன்.

கோவை மாவட்டத்தில் மட்டும் இந்த திட்டத்தின் மூலம் 198 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் சிகிச்சை தொகையாக ரூ.20.03 இலட்சம் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்
முதல்வர் அறிவித்த இச்சிறப்புமிகு திட்டத்தின் பயனாக, விபத்து நடந்தவுடன் எவ்வித தாமதமும் இல்லாமல், விபத்தில் சிக்கியவர்களை சரி யான நேரத்தில் மருத்துவ மனைக்கு கொண்டு செல்வது, அவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதும், விரைவாக அணுகுதல், உயிர் மீட்பு சிகிச்சை அளித்தல், நிலைப்படுத்துதல், பாதிப்பை கட்டுப்படுத்தும் அறுவை சிகிச்சைகள், இயல்பு வாழ்க்கையை மீட்டெடுத்தல், மறுவாழ்வு சிகிச்சை போன்றவை இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக உள்ளது.

இவ்வாறு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி தொ வித்தார்.பாதிக்கப்பட்ட மோகன் குமாரின் சகோதரர் பாலசுப் பிரமணியம் கூறுகையில், பொள்ளாச்சியில் இருந்து அழைத்து வரப்பட்டு கங்கா மருத்துவமனையில் உடனடியாக முதலமைச்சரின் ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

விபத்து நடந்தவுடன் (golden hours) எனது சகோதரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதன் பயனாக, தற்போது மிகவும் நலமாக உள்ளார். இன்னுயிர் திட்டம் தந்து, எனது சகோ தரரின் உயர்மீட்க உதவிய முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img