fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைகள் கட்டுமானபணியினை துவக்கி வைத்த மேயர்

கோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைகள் கட்டுமானபணியினை துவக்கி வைத்த மேயர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.18க்குட்பட்ட நல்லாம்பாளையம், ராமசாமி நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமானபணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார், பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.

உடன் வடக்கு மண்டல குழு தலைவர் கதிர்வேல், கல்விக்குழு தலைவர் மாலதி நாகராஜ், மாமன்ற உறுப்பினர் ராதா கிருஷ்ணன், செயற்பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர் (பொ) விமலா, சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் மரகதம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img